ஆளுநர் vs தவெக மோதல் ஆரம்பம்..? நாளை பதவியேற்பு விழா நடக்குமா? முட்டுக்கட்டை போடும் அர்லேகர்!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஆளுநர் முன்கூட்டியே பெரும்பான்மைக்கான ஆதாரங்களைக் கோருவது பாஜகவின் அரசியல் நெருக்கடியே என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற கருத்துகள் எழுந்துள்ளன.
தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஏற்கனவே, 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 6 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்த விஜய், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார். எனினும், அதில் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இருப்பது குறித்த விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டபடி நாளை பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
எஸ்.ஆர். பொம்மை (1994) மற்றும் ராமேஸ்வர் பிரசாத் (2006) வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சிறப்புமிக்க தீர்ப்புகளின்படி, ஒரு அரசின் பலத்தைப் பரிசோதிக்கும் ஒரே இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல; ஆளுநருக்குத் தனிப்பட்ட முறையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் அதிகாரம் கிடையாது.
மேலும், 2016 நபம் ரேபியா வழக்கு மற்றும் 2020 சிவராஜ் சிங் சவுகான் வழக்குகளில் ஆளுநரின் அதிகார வரம்பு மிகக் குறுகியது என்பதையும், அவர் ஒரு அரசியல்வாதியாகச் செயல்படக் கூடாது என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கோவா, மணிப்பூர் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருந்தபோது உச்ச நீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட முன்னுதாரணங்கள் இருக்கும் நிலையில், தற்போது தமிழகத்திலும் ஆளுநர் மரபுகளை மீறி முட்டுக்கட்டை போடுவது ஜனநாயகப் படுகொலை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் ஏழாம்பொருத்தமாக இருந்தது. பல தருணங்களில் இரு தரப்பும் முட்டிக்கொண்டன. இந்நிலையில், ஆட்சி அமைக்கும் விவகாரத்திலேயே ஆளுநருக்கும், தவெக தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications