ஜல்லிக்கட்டு.. காளைகளின் கொம்பில் வரப்போகும் மாற்றம்.. வீரர்கள் காயம் அடையாமல் இருக்க புதிய திட்டம்
சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் காயம் அடைவதை தடுக்கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் பொறுத்த ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழர்களின் மரபு வழி வீர விளையாட்டுக்களில் முக்கியமானது ஜல்லிக்கட்டு. ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு , ஜல்லிக்கட்டு போன்ற பெயர்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அதேநேரம் இந்த போட்டிகள் வணிக நோக்கத்திற்கு மாற்ற அனுமதிக்கப்படவில்லை. அப்படி அனுமதிக்கப்படாமல் பாராம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரும் புகழ் பெற்றவை ஆகும். குறப்பாக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். அரசு சார்பில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15 ம் தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளததால் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல் பயிற்சி, மண்ணை குவித்து வைத்து அதில் முட்டி கொம்புகளை தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி மூலம் தயாராகி வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
இதனிடையே ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மறு ஆய்வு மேற் செய்த இந்திய விலங்குகள் நலவாரியம், கூட்ட நெரிசல், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தி இருக்கிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் களம் அவிழ்த்துவிடப்படும் நிலையில் 55 முதல் 60 காளைகள் வரை மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டும் என்றும அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளும், 950 மாடுபிடி வீரர்களும் காயமடைந்தார்கள். தமிழகம் முழுவதும் நடந்த 350 ஜல்லிக்கட்டுகளில் மொத்தம் 8 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனிடையே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், காயங்களை குறைக்கவும் காளைகளின் கொம்புகளில் ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் (ஹார்ன்புஷ்) பொருத்த தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் போட்டிகளை நடத்தும் விழா கமிட்டிகளுக்கு தமிழக அரசும், விலங்குகள் நலவாரியமும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பதோடு, இந்த லப்பர் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்க அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications