வடகொரியா போல மக்களை கண்காணிக்க திட்டம்? மத்திய அரசு கொண்டு வரும் கட்டாய ஆப்.. தப்ப முடியாது?
சென்னை: புதிய மொபைல் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழைய போன்களில் இந்த செயலி அப்டேட் மூலம் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு மக்களை கண்காணிக்குமோ என்ற கேள்வியும், சந்தேகமும் கூட எழுந்துள்ளது.
போலி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் அடையாள எண் (IMEI) எண்களை தடுப்பதும் அதன் மூலம் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மோசடிகளை தடுக்க உதவும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் தங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியாமல் தடுக்க, ஐஎம்இஐ எண்களை மாற்றுவதாகவும், திருடப்பட்ட போன்களை அறியாமல் வாங்கும் அப்பாவி மக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீக்க முடியாத செயலி சஞ்சார் சாத்தி
இந்த சஞ்சார் சாத்தி செயலி இனி நாம் வாங்கும் அனைத்து போன்களிலும் இருக்கும். அதை டெலிட் செய்ய முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் அதை நீக்க முடியாது. அதே சமயம் பழைய போன்களில் அப்டேட் மூலமாக உங்கள் போன்களில் இந்த செயலி கொண்டு வரப்படும். இது போன்ற செயலிகள் ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளில் அரசு மூலம் மக்களின் போன்களில் பதிவிறக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் 'செகண்ட் ஹேண்ட்' தொலைபேசி சந்தையும், திருடப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட சாதனங்களை எளிதாக மறுவிற்பனை செய்வதும் இந்த செயலியை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதம் மற்றும் இணையக் குற்றவியல் விசாரணைகளில் தொலைபேசிகளைக் கண்டுபிடிப்பதற்கான நம்பகமான செயலி ஒன்றை உருவாக்குவதை அவசியமாக்கி உள்ளது. .
அரசு வட்டாரங்களின் தகவல்படி, போலியாக மாற்றப்பட்ட ஐஎம்இஐ எண்கள் கொண்ட தொலைபேசிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை. தொலைத்தொடர்பு வலைப்பின்னல்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றும் திறன் கொண்டவை. ஐஎம்இஐ மோசடி மூலம் உங்கள் போனின் அடையாளத்தை மாற்ற முடியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் செய்ய முடியும்.
இதனால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. சஞ்சார் சாத்தி செயலி ஐஎம்இஐ எண்களைச் சரிபார்க்கவும், திருடப்பட்ட தொலைபேசிகளைத் தடுக்கவும், போன்களின் தவறான பயன்பாட்டைத் தவிர்க்கவும் உதவும் என்று அரசு வாதிடுகிறது.
தனிப்பட்ட தகவல்கள்
இதனால் தனிப்பட்ட தரவுகள் எதுவும் ஆப் மூலம் அணுகப்படாது என்றும், சட்டவிரோத சாதனங்களின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதே இதன் ஒரே நோக்கம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் நடவடிக்கைதான், மற்றபடி மக்களை உளவு பார்க்க அல்ல என்று அரசு கூறி உள்ளது.
ஆனால் அங்குதான் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த செயலி மூலம் ஜிபிஎஸ் கண்காணிக்கப்படலாம், போனின் ஆவணங்கள் கண்காணிக்கப்படலாம், போனின் ரெக்கார்டஸ் தொடங்கி புகைப்படங்கள் வரை கண்காணிக்கப்படலாம். அப்படி கண்காணிக்கப்படும் பட்சத்தில், அரசு நம்முடைய செயல்களை, உரையாடல்களை தீவிரமாக கண்காணிக்க முடியும்.
இதனால் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அரசின் மக்களை கண்காணிக்க இப்படி செய்கிறது என்றும் விமர்சித்துள்ளன. தனிநபர்களின் தனியுரிமை மீதான அத்துமீறல் என்றும் அவை குற்றம் சாட்டுகின்றன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்த உத்தரவை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று விமர்சனம் செய்தார். எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிக் பிரதர் எங்களை கண்காணிக்க முடியாது. சட்டப்பிரிவு 21ன் கீழ் தனியுரிமை உரிமை வாழ்வுக்கான அடிப்படை உரிமையின் ஒரு அங்கம். சஞ்சார் சாத்தியை ஒவ்வொரு இந்தியனையும் கண்காணிக்கப் பயன்படும் ஒரு பேரழிவு கருவி என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications