அம்சமா பொட்டு வைத்திருக்கிறாரே.. இவர்தான் "மாமா" கண்ணன்.. 15 வயது சிறுமியை சீரழித்த 53 வயசு கொடூரன்
15 வயது சிறுமியை சீரழித்த அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: அம்சமான பொட்டு, நெற்றி நிறைய குங்குமம் என்று காட்சி தருகிறாரே.. இவர்தான் கண்ணன் மாமா.. வண்ணாரப்பேட்டையில் 15 வயசு சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்தார்களே, அதில் இந்த கண்ணனும் ஒருவர்.. இவர் ஒரு அரசு அதிகாரியாம்!
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமி, தன்னுடைய பெரியம்மா மகள் பெயர் ஷாகிதா பானுவால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்.. ஷாகிதா பானுவும் அவரது கணவர் மதன்குமார், மதன்குமாரின் சகோதரி சந்தியா ஆகிய 3 பேரும் பணத்துக்காக ஆசைப்பட்டு, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
இதுதொடர்பாக சிறுமியின் அம்மா, போலீசில் புகார் தரவும், ஷாகிதா பானு உள்ளிட்ட 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழில் போட்டி காரணமாக புகார் தர போய் இந்த விஷயம் வெளியே வந்தது.. இதுகுறித்து விசாரிக்க போலீசார் பானு வீட்டுக்கு போகும்போதுதான், அங்கே சுருண்டு கொண்டிருந்த சிறுமியின் உருக்குலைந்த உருவத்தை கண்டு அதிர்ந்தனர்.

வண்ணாரப்பேட்டை
பிறகு விசாரிக்கும்போதுதான் மொத்த பேரும் இந்த வழக்கில் சிக்கினார்கள். எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் என லிஸ்ட் வெளியே வந்தது. சிறுமியை தினமும் பாலியல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள்.. முக்கியமாக அரசியல் பிரமுகர்களுக்குதான் சிறுமி அதிக முறை விலை பேசப்பட்டிருக்கிறாள்.

லிஸ்ட்
அந்த நபர்கள் எல்லாம் யார் என்று விசாரணை ஆரம்பமானது.. டாக்டர்கள், முன்னாள் டிஎஸ்பிக்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இன்ஸ்பெக்டர்கள் என 50 பேர் லிஸ்ட் தயாராகி உள்ளது.. மொத்த பேரையும் போலீசார் கைது செய்ய போகிறார்கள்.. தவறு செய்தவர்கள் ஒருத்தரையுமே விட போவதில்லை என்ற உறுதியில் சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படியே இப்போது ஒருவர் சிக்கி உள்ளார்.

கண்ணன்
21 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் கட்டுமான பிரிவில் தலைமை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்... இவர் பெயர் கண்ணன்.. 53 வயசாகிறதாம்.. ஒரு அரசு அதிகாரி என்றுகூட பார்க்காமல், வயசு 53 ஆகிறதே என்றுகூட பார்க்காமல், 15 வயசு பிஞ்சுவை நாசம் செய்துள்ளார்.. உயர் அதிகாரியான கண்ணன், மதுரையை சேர்ந்தவர்... சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்..

கார்த்திக்
இவர் கார்த்திக் என்பவரின் உதவியுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.. அடையாள அணிவகுப்பில் கண்ணனை சிறுமியும் உறுதி செய்துள்ளார்... அரசு உயர் அதிகாரியான கண்ணனை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் பல கொடூரர்களை நம் போலீசார் வெளிக் கொணருவார்கள் என்று நம்பப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications