வெரி குட்நியூஸ்.. ரூ.1000 உரிமைத்தொகை வரலையா? இந்த மாதம் சான்ஸ் இருக்கு! போன் கால் மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகைக்கு பல்வேறு தகுதியான குடும்பத் தலைகள்கண்டறியப்பட்டு, அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் எண்களுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் இடம்பெற்று உள்ளன. விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் சரிதானா என கேட்கும் அதிகாரிகள், அது உறுதியானால் இந்த மாதம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விண்ணப்பதாரர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications