சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளுக்கு மேஜர் உத்தரவு.. ஒரு வாரத்திலேயே.. ஆக்‌ஷனில் குதித்த தமிழக அரசு.. மக்களுக்கு ஹேப்பி

ரேஷன் கடை ஆவணங்களை, சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கிராம சபை கூட்டத்தில், ரேஷன் கடை ஆவணங்களை, சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறும், புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணுமாறும் அதிகாரிகளுக்கு உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

அசோக்நகரில்.. நடுரோட்டில் சேஸிங்.. கே.எஸ்.அழகிரி பேத்தியின் கன்னத்தில் பளார் விட்ட அதிகாரி.. என்னவாம்அசோக்நகரில்.. நடுரோட்டில் சேஸிங்.. கே.எஸ்.அழகிரி பேத்தியின் கன்னத்தில் பளார் விட்ட அதிகாரி.. என்னவாம்

ஹேப்பி

ஹேப்பி

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் நேற்றுகூட, சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு பற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல் ஒன்றை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

கருவிழி + செக்கிங்

கருவிழி + செக்கிங்

அதன்படி, ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டுவரப்படும் என்றும், அக்டோபர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் சில நியாயவிலைக் கடைகளில் கருவிழி பதிவு அடிப்படையில் பொருட்களை வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும் என்றும் கூறினார்.. அதுமட்டுமல்ல, இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்துள்ளார்.

ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூடுதலாக அவர் கூறினார்.. இந்நிலையில், இன்னொரு அறிவிப்பினை உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது..

கிராம சபாக்கள்

கிராம சபாக்கள்

அதாவது, வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது... சுழற்சி முறையை பயன்படுத்தி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.. மேலும் கிராம சபை கூட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை அக்டோபர் 12ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்குலர்

சர்குலர்

இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.. அதில் உள்ளதாவது: வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று மாவட்டத்தில் நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் அந்தந்த கிராமங்களில் செயல்படும் ரேஷன் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை கிராம சபை முன், தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

நிம்மதி + நம்பிக்கை

நிம்மதி + நம்பிக்கை

கிராம சபை கூட்டங்களில் பெறப்படும் புகார்களை ஒரு வாரத்தில் தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள், பெறப்பட்ட புகார் உள்ளிட்ட விபரங்களை கூட்டம் முடிந்த 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.. ஆக, நடக்க போகும், கிராம சபைக் கூட்டத்திலேயே, ரேஷன் கடை ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துமாறும், புகார்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணுமாறும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.. அத்துடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

English summary
great announcement by tamilnadu co operative dept and sudden order to ration staffs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X