Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ப்ரைஸ்" தர்றாரே ஸ்டாலின்.. அடடே, இப்படியும் யோசிக்கலாமா.. முதல்வரின் "ஈரமனசு".. திணறும் கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி மும்முரமாக வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள்? வேட்பாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. அந்தவகையில், திமுக சார்பில் இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

சமீபத்தில் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார் திருமகன். இதனையடுத்து, இந்த தொகுதி காலியாக இருக்கிறதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தமிழக தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்திருக்கிறார்.

6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே பரபரப்பு உருவாகியிருக்கிறது.

சமயோஜிதம்

சமயோஜிதம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது யார் என இப்போதே விவாதங்கள் சூடு பிடித்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் தமாகாவும் களமிறங்கின... ஆனால் தமாகா யுவராஜா தோல்வியடைந்தார்.. இந்நிலையில், அதிமுக மேலிடம் ஈரோடு கிழக்கு தொகுதியை குறிவைத்துள்ளது.. ஆனால், கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுவதால், எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. கோர்ட் தீர்ப்பும் இதுவரை வராத நிலையில், இந்த இடைத்தேர்தல் சாத்தியமா என்ற கேள்வியும் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறது..

 பஞ்ச் பஞ்ச்

பஞ்ச் பஞ்ச்

ஒருவேளை சின்னம் பெறுவதில் சிக்கல் இருந்தால் இந்த முறையும், தமாகாவுக்கே, சமயோஜிதமாக தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், பாஜகவோ, அதிமுகவின் உட்கட்சி பூசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பார்க்கிறதாம்.. கூட்டணியை தவிர்த்துவிட்டு, தனித்து களமிறங்க தயாராவதாகவும் சொல்கிறார்கள்.. சமீபத்தில் திண்டுக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருக்கிறார்.. அப்போது இதை பற்றி அண்ணாமலையிடம் நிர்வாகிகள் கருத்து கேட்டார்களாம்..

சறுக்கல்கள்

சறுக்கல்கள்

அதற்கு அண்ணாமலை, "நாம் போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்கமுடியும்... திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. இது நமக்குதான் பிளஸ்" என்றாராம் நிர்வாகிகளிடம்".. ஆக அதிமுக, தமாகாவுக்கு தொகுதியை விட்டுத்தந்தாலும்கூட, பாஜக தனித்து களமிறங்க நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், திமுக தரப்பு என்ன முடிவெடுக்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது..

 வாசன் பிளான்

வாசன் பிளான்

பொதுவாக, இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்பது இயல்பான விஷயமாக நடைமுறையில் இருந்தாலும்கூட, இந்த முறை, ஆளும் கட்சியே சில குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து முக்கியமான தகவல் ஒன்றும் நம் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.. கடந்த முறை, காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா.வும், தமாகா சார்பில் யுவராஜாவும் (இரட்டை இலை சின்னத்தில்) போட்டியிட்டனர். இதில், 9,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் திருமகன் ஈ.வெ.ரா.!

 விருப்பம் அழகிரி

விருப்பம் அழகிரி

பொதுவாக, தமிழக கூட்டணி அரசியலில் இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு, முந்தைய தேர்தலில் எந்த கட்சி போட்டியிட்டதோ அந்த கட்சிக்கே சீட் ஒதுக்குவது என்பது நாகரீகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கொள்கையை திமுக பின்பற்றி வருகிறது. ஆனால், இந்த முறை இந்த தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என இப்போதே அறிவாலயத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் ஈரோடு திமுகவினர். காங்கிரஸ் தலைவர் அழகிரியோ, மீண்டும் காங்கிரஸ் இங்கு போட்டியிடும் என்றிருக்கிறார்.

ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ்

இப்படிப்பட்ட சூழலில், முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்த தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளாராம்.. "காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஜெயித்த தொகுதி. அதனால் அவரின் மனநிலையை குறிப்பாக அவரது விருப்பத்தை அறிந்து கொள்வது முக்கியம். இளங்கோவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கே மீண்டும் இந்த தொகுதியை ஒதுக்கலாம். செல்வாக்கில்லாத காங்கிரஸ்காரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தால் திமுகவே போட்டியிடலாம். ஏனெனில், வேறு யாருக்காவது தொகுதியை ஒதுக்கி அவர் தோற்றுப்போனால் அது காங்கிரசை மட்டுமல்ல திமுகவையும் திமுக ஆட்சியையும் அரசியல் ரீதியாக பாதிக்கும். அதனால் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கிறது என தெரிந்து முடிவு செய்துகொள்ளலாம் என்று கருதுகிறாராம் ஸ்டாலின்.

 சூழும் நெருக்கடி

சூழும் நெருக்கடி

ஸ்டாலினின் இந்த யோசனை, காங்கிரசுக்கும் ஒருவித நெருக்கடியை தந்துள்ளது. செல்வாக்கு நிறைந்தவரை தொகுதியில் நிறுத்தி வெற்றியும் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தமும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.. இல்லாவிட்டால் கூட்டணி தலைமைக்கும் பதில் சொல்ல வேண்டி வருவதுடன், எம்பி தேர்தல் சமயத்திலும், இதன் தாக்கத்தை எதிர்கொள்ளவேண்டி வரலாம்.. எனவே, காங்கிரஸ் முடிவுதான் இதில் எல்லாராலும் எதிர்நோக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஸ்டாலினின் இந்த யோசனை மிகுந்த முக்கியத்துவத்தை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.. காரணம், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, சந்திக்க போகும் முதல் இடைத்தேர்தல் என்பதால், கவனத்துடன் கையாள வேண்டி உள்ளது..

 கசியும் ஈரம்

கசியும் ஈரம்

அதுமட்டுமல்ல, இந்த ஒன்றரை வருட காலத்திலேயே ஆளும் கட்சிமீது நிறைய அதிருப்திகளும், சலசலப்புகளும் எழுந்தபடியே உள்ளன.. இவைகளையே மையமாக வைத்து, எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசியலை வேகப்படுத்தி வருகின்றன.. அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. எனவே, கூட்டணிக்கு ஒதுக்காமல், நேரடியாக திமுகவே அங்கு போட்டியிடவும் முடியும்.. ஆனாலும், கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டும், அதைவிட முக்கியமாக, ஈவிகேஎஸ்ஸின் மனநிலைமைக்கும், விருப்பத்துக்கும் முக்கியத்துவம் தந்து, ஸ்டாலின் முன்வைத்துள்ள யோசனை, அரசியலையும் தாண்டி, அவரது ஈரம் கசியும் இதயத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+