தெறிக்க விடுவாரா தங்கம் தென்னரசு.. சக்கரபாணி அறிவிப்பு என்ன? எகிறும் எதிர்பார்ப்புகள்.. பரபர சட்டசபை
சென்னை: இன்று சட்டசபையில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது.. அதுபோலவே, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நடந்துவருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சட்டசபை நிகழ்ந்து வருகிறது.. கடந்த 1ம் தேதி, அதாவது சனிக்கிழமையன்று தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை கட்டடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து முடிந்தது.
அன்றைய தினம் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே மறுநாள் ஞாயிறு விடுமுறை.. திங்கட்கிழமை 3ம் தேதி பேரவை கூட்டம் இல்லை. நேற்றுமுன் தினம் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை... எனவே, நேற்றைய தினம் 5ம் தேதி, உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் துறை மீதான விவாதம் நடந்தது.. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார்.
அப்போது, பொதுமக்கள் பால் மற்றும் பால் பொருட்களை உடனுக்குடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என்றார். அத்துடன், "தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி?, "அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்" என்றார். முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு குறித்து திமுக எம்எல்ஏ, டிஆர்பி ராஜா, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்..

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் நடத்த ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக மத்திய அரசு அழைப்பாணை விடுத்திருப்பதை தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.. அந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, 'இந்த அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றார். முதல்வர் பேசும்போது, "நானும் டெல்டாக்காரன்தான், உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதை போலவே, நானும் உறுதியாக இருப்பேன் என்றும், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு நிச்சயம் அனுமதி வழங்காது" என்றார் திட்டவட்டமாக.
இந்நிலையில், இன்று 6ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான விவாதம் நடக்க உள்ளது. அதுபோலவே, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.. அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர், விவாதத்துக்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்பார்கள்.
ஒவ்வொரு மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதில்,பொதுமக்களால் பெரிதும் எதிர்நோக்கப்படுவது கூட்டுறவுத்துறையாகும்.. காரணம், ஒரே நாடு, ஒரே ரேஷன் முறையில், மொபைல் ரேஷன் திட்டம், மற்றும் செறியூட்டப்பட்ட ரசாயன அரிசி உள்ளிட்டவைகள் குறித்த ஏதாவது அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications