"க்ளூக்".. சட்டென வெட்கப்பட்ட மேயர் பிரியா.. தயாநிதி சொன்ன அந்த வார்த்தை.. டக்கென திரும்பிய உதயநிதி
தயாநிதி மாறன் ஜோக் அடித்ததுமே விழுந்து விழுந்து சிரித்தார் மேயர் பிரியா
சென்னை: நேற்றைய தினம் சென்னையில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில், மேயர் பிரியா பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.. என்ன காரணம்?
சென்னை மாநகராட்சி மேயராக பலர் போட்டி போட்ட நேரத்தில், 28 வயது பெண்ணான பிரியா மேயராக அறிவிக்கப்பட்டார்...
பிரியா மேயராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சீனியர்கள் அவருக்கு அருகிலேயே இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்..

ப்ரியா குழந்தை
அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, "அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்றார்.. வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவிக்கு வந்துவிட்டவரை, சேகர்பாபு இப்படி சொன்னது பரபரப்பாக பேசப்பட்டது.. அதேபோல, மேயர் பிரியா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதெல்லாம், பல நேரங்களில் விஷயம் தெரியாமல் திணறியதாகவும் சொல்லப்பட்டது.. அப்படித்தான் பலமுறை ஏடாகூடமாக பேசி சலசலப்புகளில் சிக்கினார்.. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது..

தயாநிதி மாறன்
இதற்கு பிறகுதான்,செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் பிரியா தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.. இப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் பிரியா.. எனினும், மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, பரவலாக வரவேற்பை பெற்று வருவதையும் மறுக்க முடியாது..!

புன்னகை
ஒருமுறை அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் பேசும்போது, சிதம்பரம் கோயில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு சேகர்பாபு "அதுக்கு பெயரே சிதம்பர ரகசியம்தானே" என்று கமெண்ட் அடித்தார்.. இதைக் கேட்டதும், பக்கத்தில் நின்றிருந்த மேயர் பிரியா, க்ளூக்கென வாய்விட்டு சிரித்துவிட்டார்.. திடீர்னு சிரிப்பு சத்தம் கேட்கவும் டக்கென திரும்பி பார்த்து புன்னகைத்தார் தயாநிதிமாறன்.. நேற்றுகூட ஒரு இயல்பான சம்பவம் நடந்துள்ளது.

க்ளூக் சிரிப்பு
கிழக்கு துறைமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், வைரமுத்து போன்றோரை சிறப்பு விருந்தினர்களாக சேகர்பாபு அழைத்திருந்தார்.. முதலில் உதயநிதி ஸ்டாலின் மேடையேறி அங்கு போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்துவிட்டார்.. அவருக்கு பின்னாடியே, மேயர் பிரியாவும், தயாநிதி மாறனும் சென்றனர்.. உதயநிதிக்கு பக்கத்தில் இருந்த சேரில், மேயர் பிரியா உட்கார்ந்துவிட்டார்.. இதை பார்த்ததும் ஒரு செகண்ட் தயாநிதி மாறன் அப்படியே நின்றுவிட்டார்.

வெட்கப்பட்ட ப்ரியா
யம்மா.. அது என் சீட் என்று தயாநிதி மாறன் சொல்லவும், பதறிப்போய் எழுந்துவிட்டார் பிரியா.. பிறகு அந்த சீட்டில் தயாநிதி மாறன் உட்கார, வேறு சீட்டில் இடம் மாறி உட்கார்ந்தார் பிரியா. தயாநிதி சொன்னதை கேட்டு, பிரியா பதறியதை பார்த்து உதயநிதிக்கே சிரிப்பு வந்துவிட்டது.. இதற்கு பிறகு, திடீரென மேயரை வாழ்த்துரை சொல்ல சேகர் பாபு அழைத்தார்.. இதை கொஞ்சமும் பிரியா எதிர்பார்க்கவில்லை.. "வணக்கத்திற்குரிய மாநகரட்சி மேயர் அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்" என்று மைக்கில் திடீரென சேகர் பாபு சொன்னதுமே, அதிர்ச்சியடைந்து, முகத்தை கையால் மூடிக் கொண்டார் பிரியா..

போ மா போங்க
அதற்கு பிறகு பிரியா சேகர்பாபுவிடம் எழுந்து சென்று, "அண்ணா அண்ணா" என்று அழைத்தார்.. அதற்கு சேகர்பாபு, "போ மா.. பேசுங்க போங்க" என்று சொன்னதும், மைக்கை பிடித்து வாழ்த்துரை வழங்க ஆரம்பித்தார். அப்போது பிரியா பேசியது இதுதான்: 'பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சிதான் உதாரணம்.. நானே ஒரு உதாரணம்தான்.. என்னை மேயராக்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் என்னை முன்னே நிற்கவைத்து வருவதும் சாட்சியாக விளங்கி வருகிறது.. அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக நம் முதல்வர் தமிழகத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறார்..

செதுக்கி செதுக்கி
இந்த தமிழகத்துக்கு பொருத்தமான தலைவர் யாரும் இல்லையே என்று ஏங்கியும் திணறியும் வந்தநிலையில், நம் முதல்வர் ஸ்டாலின், உழைப்பு உழைப்பு உழைப்பு என்று உழைப்பால் தன்னை தானே செதுக்கி கொண்டு, தமிழகத்தையும் திராவிட மாடல் ஆட்சியாக செதுக்கி வருகிறார்.. இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்லாமல், வரும் ஆண்டுகளிலும், திமுகவாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, இரண்டிலுமே நம் முதல்வரே இந்த தமிழகத்தை ஆள்வார்.. வழிநடத்துவார்.." என்று பேசி முடித்தார்.

தயாநிதி
முன்னதாக, தயாநிதி மாறன் பேசும்போது, இந்த தேர்தலில் வெற்றி பெற, வியூகம் அமைத்து செயல்பட்டவர் யார் என்றால் சகோதரர் உதயநிதிதான்.. செங்கல்லை காட்டி காட்டியே மதுரை எய்ம்ஸின் அவலத்தை சொன்னார்.. இன்றுவரை அந்த ஒரு செங்கல்தான் எய்ம்ஸ் மருத்துவமனையாகிவிட்டது.. இது பாஜக அரசின் கேவலத்தை எடுத்து காட்டுகிறது என்றார்.. இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "துறைமுகம், கிழக்கு மாவட்டம் பகுதிக்கு மாதத்துக்கு ஒருமுறையாவது வந்துவிடுகிறேன்.. நான் எந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்று எனக்கே சில சமயம் சந்தேகம் வந்துடும், சேப்பாக்கமா? துறைமுகமா? என்று குழப்பம் வந்துவிடும்..

வாயிலேயே வடை
மோடி எப்படி வாயிலேயே வடை சுடுவாரோ, அதுமாதிரி பாஜகவை சேர்ந்த அத்தனை பேரும் வாயிலே வடையை சுடுவாங்க.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை தூக்கிட்டு போய் அந்த பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன் என்று தயாநிதி மாறன் அண்ணன் சொன்னார்.. ஆனால், சமீபத்தில் பாஜக தலைவர் 95 சதவீதம் எய்ம்ஸ் வேலை முடிந்துவிட்டது என்று சொல்விட்டு போகிறார்.. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இன்றைக்கு ஒன்றிய அரசை தட்டிக்கேட்பவரும், மாநில உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுப்பவரும், ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும்தான்" என்றார்.

கரகோஷம்
தொடர்ந்து பேசும்போது, "நாம இந்தி திணிப்பு போராட்டம் நடத்தினால், அதற்கு நேர்மாறாக இன்னொரு போராட்டத்தை இவங்களே நடத்திக் கொள்கிறார்கள்.. இங்கே இருக்கிற பாஜக தலைவர், பத்திரிகையாளர்களை பார்த்து குரங்குன்னு சொல்லிட்டாரு.. குரங்கு மாதிரி ஏன் என் பின்னாடி சுத்தறீங்கன்னு கேட்கிறார்.. இதுக்கெல்லாம் முக்கிய காரணம் அதிமுகதான்.. அப்படி ஒரு கட்சி இன்னைக்கு இருக்கா இல்லையேன்னா தெரியாத அளவுக்கு போய்விட்டது.. ஏன் என்றால் அவங்ககிட்டதான், இவங்க குடுமியே இருக்கு, இன்றைக்கு ஒன்றிய அரசை தட்டிக்கேட்பவரும், மாநில உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுப்பவரும், ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும்தான்" என்று சொன்னதுமே கூடியிருந்தவர்கள் விடாமல் கரகோஷத்தை எழுப்பினார்கள்.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications