இப்படி ஒருவர் இருந்தாதான் சரிப்பட்டு வரும்! குமரகுருபரன் ஐஏஎஸ் வந்த நேரம்! சென்னையில் பெரிய மாற்றம்
சென்னை: சென்னை நகரின் அழகியலை மேம்படுத்தும் முயற்சியாக, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) தெருவிளக்குக் கம்பங்கள் மற்றும் மரக்கிளைகளில் சிக்கியுள்ள சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் இணைய கேபிள்களை அகற்றத் தொடங்கியுள்ளது. சென்னையில் இங்கும் அங்கும் தொங்கும் கேபிள்களை அகற்ற முடிவு செய்துள்ளனர். இதனால் மெயின் ரோடுகளில் இனிமேல் இது போன்ற கேபிள்களை நீங்கள் காண முடியாது.
சமீபத்திய மறுஆய்வுக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜே.குமரகுருபரன் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். கேபிள் மற்றும் இணைய ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். இதனால் வார இறுதியில் கிட்டத்தட்ட 50கிமீ கேபிள்கள் அகற்றப்பட்டன.

ஜார்ஜ் டவுன், சூளைமேடு, தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகர் போன்ற பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். கணிசமான அளவில் கேபிள்கள் அகற்றப்பட்டு சென்னை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் மட்டும் 6.1 கி.மீ தூரத்திற்கு கேபிள் அகற்றப்பட்டு உள்ளது.
அதிரடி ஆக்சன்; சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் கொண்டு வரப்பட்டு 10 நாட்கள் ஆகிறது. அவர் வந்த இந்த சில நாட்களில் சென்னையில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக சென்னையை அழகாக மாற்றுவதற்கான தீவிரமான பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.
ஏற்கனவே ரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) ஜூலை 29 முதல் அதன் அனைத்து மண்டலங்களிலும் மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்து உள்ளது. இரவு நேரங்களில் மிக தீவிரமாக மாஸ் கிளீன் அப் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது போக மாநகராட்சியின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை மூன்று நாட்களுக்குள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறை உதவியுடன் அறிவுறுத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் சாலை ஓரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்படும்.
மேலும் கைவிடப்பட்ட வாகனங்களை பெருமளவில் சுத்தம் செய்து அகற்றும் என ஆணையர் ஜே. குமரகுருபரன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜூலை 22ம் தேதி பைலட் திட்டமாக சென்னையில் 3 மண்டலங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. ஜூலை 29.. அதாவது இன்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். செப்டம்பரில் பருவமழை தொடங்குவதற்கு முன் மற்றொரு சுற்று வெகுஜன சுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோதனை: முன்னதாக, அண்ணாநகர், ராயபுரம், அடையாறு உள்ளிட்ட பல மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் உள்ள பல்வேறு மீட்பு மையங்கள் மற்றும் சமையலறைகளை ஆணையர் ஆய்வு செய்தார். இந்த மையங்களில் மின்சாரம், குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறைகள், ஜெனரேட்டர்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் ஆனையிறவுப் பாலம் (39.73 கோடி மதிப்பில்), கணேசபுரத்தில் ரயில்வே மேம்பாலம் (₹226.5 கோடி), போஜராஜா நகர் லெவல் கிராசிங் (₹30.13 கோடி) உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கண்ணப்பர் திடலில் ₹6.20 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதானம் மற்றும் ஆண்ட்ரூஸ் தேவாலய வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை திரு.குமரகுருபரன் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை தயார்நிலை - மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து அவர் அறிவுறுத்தினார்.
குமரகுருபரன் ஐஏஎஸ்: சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் பதவி ஏற்றுள்ள நிலையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக வெறும் ஒரு வாரத்தில் சென்னையில் அதிரடி ஆக்சன்களை மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications