அட இதை பாருங்க.. #FairDelimitation வாசகத்துடன் ஒளிரும் சென்னை ரிப்பன் மாளிகை! என்ன விஷயம் தெரியுமா
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க பல்வேறு மாநிலங்களின் கட்சிகள் பங்கேற்கும் வகையிலான கூட்டத்திற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளைய தினம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறும் நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வாசகத்துடன் ஒளிரும் வகையில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இப்போது நமது நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே 543 தொகுதிகள் தான் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தன. அதன்படி லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு
இதற்காகத் தொகுதி மறுசீரமைப்பை அதாவது டிலிமிட்டேஷனை மத்திய அரசு செய்யவுள்ளது. இருப்பினும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழீழத்திற்கு தற்போதுள்ள பிரதிநிதித்துவம் குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து, தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதே திமுகவின் குரலாக இருக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியிருந்தது.
நாளை பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் கூட்டம்
அடுத்தகட்டமாக இப்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைந்து தமிழக அரசு கூட்டம் நடத்துகிறது. சென்னையில் நாளை மார்ச் 22ம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளும் பங்கேற்க உள்ளது. குறிப்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர்.
ரிப்பன் மாளிகை
இதற்கிடையே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வாசகத்துடன் ஒளிரும் வகையில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.. #FairDelimitation என்ற வாசகம் இருக்கும் வகையில் சென்னை மாநகராட்சி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், "தொகுதி மறுசீரமைப்பால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்படும்.. மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கு மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும்.
மக்கள் தொகையைக் குறைத்து நாட்டின் வளர்ச்சியில் பங்களித்து மாநிலங்களுக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது. அது சரியாக இருக்காது. நாளை நடைபெறும் கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார். நாளைய தினம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications