கண்மூடித்தனம்.. அம்மியில் அரைத்தால்தான் சூப்பரான சமையலா? விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் ‘நறுக்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மியில் அரைத்தால்தான் சூப்பரான சமையல் வரும் என்று சொல்பவர்களை அரைக்கவிட்டால்தான் புரியும். இந்த ஒரு கண்மூடித்தனமான பழைமை முகம் என்று விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பேசியுள்ளார்.

சென்னை தரமணியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்ச்சியில் விஞ்ஞான் பிரசார அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அறிவியல் ஆய்வு முதல்.. எதிர்காலத்தில் தொழில்நுட்ப புரட்சியால் ஏற்படும் வாய்ப்புகள் என்ன என்பது குறித்தும் விரிவாக பேசினர். த.வி வெங்கடேஸ்வரன் பேசியதாவது:-

Grinding in Metate will result in superior cooking these talk is onservatism only says Scientist Venkateswaran

கேலக்ஸி: இன்றைக்கு அறிவியல் பெரும்பாலான துறைகளில் நமது உள்ளூணர்வுக்கு மாறாக வளர்ந்து வருகிறது. அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் இப்படி இருக்கிறது என்பதே அறிவியல் கண்டுபிடிப்பில் இருக்கும் சவாலாக நான் பார்க்கிறேன்.

ரைபோசாம் பற்றி எல்லோரும் கேள்வி பட்டு இருப்போம். செல்லிற்கு உள்ளே இருக்கும் புரதம்.. இந்த ரைபோசோமின் சராசரி அளவு 20 நானோ மீட்டர்.. சராசரி வேர்கடலையில் அளவு 20 மில்லி மீட்டர்... ரைபோசோமை வேர்க்கடலை அளவிற்கு பெரிதாக்கினால் அதாவது 20 மில்லி மீட்டருக்கு பெரிதாக்கினால்.. வேர்க்கடலை சென்னை அளவுக்கு பெரிதாகும்.

விவசாயத்திற்கு பிறகு: எனவே இன்று அறிவியல் ஆராய்ச்சி செய்யும் இடம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அல்லது அவ்வளவு நுணுக்கமானது... அல்லது அவ்வளவு பெரியது. இன்னைக்கு பிரபஞ்சத்தில் ஒரு எல்லையில் ஒரு கேலக்சியை பார்த்து இருக்கிறோம் என்றால் 13.8 பில்லியன் ஒளியாண்டு என்று சொல்கிறோம். இது நமது கற்பனைக்கு அப்பால் இருக்கும் விஷயத்தை பற்றி அறிவியல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

வரலாறு போன்ற விஷயங்களை படித்து இருக்கிறோம். விவசாயம் எப்போது ஏற்பட்டதோ அப்போதுதான் குடியிருப்பு ஏற்பட்டது என்பதை நாம் படித்து இருக்கிறோம். அதுவரைக்கும் மனிதன் நாடோடிகளாகத்தான் இருந்தார்கள். விவசாயம் செய்தால் அந்த நிலத்தை திருத்து உழ வேண்டும். அப்போதுதான் குடியிருப்பு என்று உருவானது. இன்னைக்கு நாம் பார்க்கும் வரலாறு எல்லாமே அதாவது, நாடு, நகரம், என்னோட ஊர் என்ற எல்லாமே விவசாயத்திற்கு பிறகுதான்..

செயற்கை நுண்ணறிவு: 10 ஆயிரம் ஆண்டுகள், 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் விவசாயம் வந்தது. விவசாயம் எனும் தொழில் நுட்பம் மனித சமுதாயத்தை புரட்டி போட்டது. என்னுடைய கருத்தில் இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு சூழலில் நாம் நிற்கிறோம். இன்றைக்கு வளர்ந்து வரக்கூடிய புதிய தொழில் நுட்பங்கள்.. அதாவது செயற்கை நுண்ணறிவு துறையாக இருக்கலாம்.. இதே மாதிரியான பல்வேறு தொழில் நுட்பங்கள் எல்லாம் சேர்த்து 4- வது தொழில் புரட்சி என்கிறார்கள்.

தொழில் புரட்சி: இந்த தொழில் புரட்சியின் காரணமாக வேலை என்பதன் பொருளே மாறப்போகிறது என்று விவாதம் நடக்கிறது. சமூகமே பார்க்காத விதத்தில் மாறப்போகிறது. இதுவரைக்கும் தொழில் நுட்பத்தின் பிரச்சினையாக எதையெல்லாம் பார்த்து இருக்கிறோம். மாசுபாடு. வேலை வாய்ப்பு குறைவது , வேலைக்கான் திறன் இல்லை என்று பேசியிருக்கிறோம். 4-வது தொழில் நுட்ப புரட்சியில் என்ன பிரச்சினை வரும் என்பதே நம்முடைய கற்பனைக்கும் கொஞ்சம் விரிவாக இருக்கிறது...

இந்த சூழலில் இந்த புதிய அறிவியல் தொழில் நுட்பம்பற்றி நாம் பேசும் போது மக்களுக்கான சாதக பாதக என்ன என்பதை எப்படி விவாதிப்பது. இதை ஒரு ஆபத்து என்று சொல்லிவிட்டு போயிவிடலாம்.. ஆனால் இது எல்லாம் அறிவியல் பார்வையாக இருக்காது. நியாயமான முறையில் சீர்தூக்கி பார்ப்பது என்றால் எப்படி சொல்வது என்பது புதிய பிரச்சினை என்று பார்க்கிறேன்.

சொந்தத்தில் திருமணம்: சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பது நமக்கு தெரியும். கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் வருஷமாக ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்வதால் ஜெனடிக் அடிப்படையில் பார்த்தால் அந்த ஜாதிக்குள் இருக்கும் இன்னொரு மனிதர் உங்களுக்கு நெருங்கிய சொந்தம். எனவே நீங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டால் நெருங்கிய சொந்தத்தில் தான் கல்யாணம் செய்து கொள்கிறீர்கள்.

அம்மியில் அரைத்தால் தான்: அம்மியில் அரைத்தால்தான் சூப்பரான சமையல் வரும் என்று சொல்பவர்களை அரைக்கவிட்டால்தான் புரியும். இந்த ஒரு கண்மூடித்தனமான பழைமை முகம். இது எல்லாம் எதற்கு உதவுகிறது என்றால் நாம் கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்த சமூக நீதியை கேள்விக்குறியாக்குகிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லுதல். பன்முகத்தன்மை இந்த விஷயங்களை அறிவியல் பிரசாரத்தில் இணைக்காமல் இருப்பது நியாயமான அறிவியல் பிரசாரமாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+