தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்தி வைப்பு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம், நந்தனம் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த நிலையில், தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு 2025 ஜூலை மாதம் டின்பிஎஸ்சி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் குரூப் 2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடக்கவிருந்தது.
காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
சென்னையில் மட்டும் அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட 7 மையங்களில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடக்கவிருந்தது. ஆனால் திடீரென தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் தேர்வு எண்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் நந்தனம் தேர்வு மையத்தில் வினாத்தாளே வரவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த தேர்வர்கள் உடனடியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications