வெளிநாட்டு உயிரினங்களின் இருப்பை அறிவிக்க வழிகாட்டு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு உயிரினங்களின் இருப்பை அறிவிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ரமா வெளியிட்டுஉள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவில் வெளிநாட்டு இனங்களின் வர்த்தக சந்தை அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் தேவை, கொடிய சட்ட விரோத வன விலங்கு வர்த்தகத்திற்கு ஊட்டமளிக்கிறது. இது, சம்பந்தப்பட்ட இனங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
வன விலங்கு பாதுகாப்பு திருத்த சட்டத்தின்படி, செல்லப்பிராணி வர்த்தகத்தில், எந்த இந்திய வகை பறவைகளும் அனுமதிக்கப்படுவதில்லை; பூர்வீகமற்ற வெளிநாட்டுப் பறவைகள் அனுமதிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு இனங்களின் வர்த்தகம் அல்லது இனப்பெருக்கம், அந்தந்த மாநில தலைமை வன விலங்கு காப்பாளரால் வழங்கப்படும் உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தமிழக அளவில் வெளிநாட்டு இனங்களை அடையாளம் காணுதல், தேவையான வசதிகளை சரிபார்த்தல், வெளிநாட்டு இனங்களை கண்காணிப்பதற்கான நடைமுறைகளை தரப்படுத்துதல் ஆகியவற்றுக்காக, சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வனத்துறை, இங்குள்ள வெளிநாட்டு உயிரினங்களின் இருப்பை அறிவிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது.
இந்த அறிக்கை, பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக, வனத் துறையின் forests.tn.gov.in/tnforestdept-publications என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள், 10 நாட்களுக்குள், cwlw_wildlife3yahoo.in என்ற இ - மெயில் முகவரிக்கு, தங்கள் கருத்துக்களை அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications