பெங்களூருவை விட சென்னை தான் பெஸ்ட்! அப்போ டெல்லி? அது சுத்த வேஸ்ட்.. விவாதமான சிஇஓவின் ட்வீட்
சென்னை: தமிழகத்திற்கு வந்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் சென்னையின் அழகையும் காற்றின் தரத்தையும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்!
மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சென்னைக்கு வரும்போது நகரின் அழகையும் இங்குள்ள மக்களின் பண்பையும் பார்த்து வியந்து போவார்கள். ஏற்கனவே இதுபோல பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

புகழ்ந்து தள்ளிய பிரபல சிஇஓ
குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். சென்னையின் அழகையும், காற்றின் தரத்தையும் சமூக வலைத்தளத்தில் அவர் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. மேலும், இந்திய நகரங்களின் வாழ்க்கை முறை மற்றும் வசதிகள் குறித்த விவாதத்தை அது கிளப்பியது.
சென்னை பெஸ்ட்
பிரபல மேட்ரிமோனி நிறுவனமான க்னாட் டேட்டிங் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜஸ்வீர் சிங் தான் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார். அங்கு அவர் தனது ஹோட்டல் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்ட சென்னையின் தெளிவான நீல வான போட்டோவை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும், "இதை நான் நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை. சென்னை அழகாக இருக்கிறது.. பெங்களூருவை விடச் சிறந்தது என சொல்லலாம். குர்கானில் பெரிய பால்கனிகள் மற்றும் நல்ல சாலைகள் மட்டுமே உள்ளன. இங்கு AQI 23ஆக உள்ளது" என்று அவர் சென்னையைப் புகழ்ந்து தள்ளி இருந்தார்.
AQI என்பது காற்று தர மதிப்பீடாகும். இது 0-50 வரை இருந்தால் காற்றின் தரம் சிறப்பாக இருப்பதாக அர்த்தம். 50 முதல் 100 வரை இருந்தால் ஓகே என அர்த்தம்.. 100-200 வரை இருந்தால் சுமாராக இருக்கிறது என அர்த்தம். 200-300 வரை என்றால் மோசம் என்றும் 300-400 வரை இருந்தால் மிக மோசம் என்றும் அர்த்தம். 500ஐ தாண்டினால் ஆபத்து என அர்த்தம்..
டெல்லி மோசம்
டெல்லியில் சில பகுதிகளில் இந்தாண்டு இது 500ஐ தாண்டி இருந்தது. இப்போதும் கூட பல இடங்களில் 300ஐ தாண்டி மிக மோசம் என்ற நிலையிலேயே இருக்கிறது. இந்த ஜஸ்வீர் சிங் இருக்கும் குர்கானிலும் கூட பல இடங்களில் காற்றின் தரம் 300க்கு மேல் தான் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் சென்னையில் காற்றின் தரம் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார்.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் உடனடியாக டிரெண்டானது. இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இதை குர்கானில் நான் இருமலுடன் படிக்கிறேன்.. டெல்லியில் இந்தளவுக்குத் தூய்மையான காற்றை நிச்சயம் பார்க்கவே முடியாது" எனப் பதிவிட்டுள்ளார். சென்னை நகரின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் மற்றொரு நபர், "சென்னை உண்மையான மதிப்பை யாரும் புரிந்து கொள்வதில்லை. கிளைமேட், சாலைகள், உணவகங்கள், பொது போக்குவரத்து ஆகியவற்றை விட இது கலாச்சாரம் தொடர்புடையது. எளிமையும் அடக்கமும் தான் இங்கு கார் மற்றும் வீட்டை விட மதிப்புமிக்கவை" என்று பதிவிட்டார்..
சென்னை vs பெங்களூர்
இன்னொரு நபர், "100% உண்மை.. பெங்களூரை விடச் சென்னை நல்ல நகரம்" எனப் பதிவிட்டார். உடனடியாக வேறு சில நெட்டிசன்கள் பெங்களூருக்கு ஆதரவாக வந்துவிட்டனர். இது தொடர்பாக அவர்கள், "பெங்களூரை மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் முன் மீண்டும் சிந்தியுங்கள். சென்னையுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் டிராபிக் அதிகம் தான்.. ஆனால் வானிலை, வேலை வாய்ப்புகள், உணவு என வரும்போது எந்த நகரமும் பெங்களூருவை மிஞ்ச முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications