ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்கு தான் நஷ்டம் -குருமூர்த்தி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்கு தான் நஷ்டம் என துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என்றும் தமிழகத்தில் தற்போது மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் என்று யாருமில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், சசிகலா தரப்பிற்கு தமது தரப்பில் இருந்து எந்த உதவிகளும் செய்யப்படவில்லை என்றும் கிசு கிசு செய்திகளுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை டிடிவி தினகரனை தாம் சந்தித்து பேசியதில்லை என விளக்கம் அளித்தார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தேர்தல் வியூக வகுப்பாளர்களை சம்பளம் கொடுத்து பணியமர்த்தியிருப்பதை பார்த்தாலே அங்கு சரியான தலைமை இல்லாதது புரிய வரும் எனக் கூறினார். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி அது குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் கீழ் செல்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்திற்கு நிறைய செய்ய வேண்டிய கடமை ரஜினிக்கு உள்ளதாகவும் அவர் மீது மக்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளாக தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகியிருப்பதாகவும் ரஜினி வந்தால் இந்த நிலைமை மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.
தமது நம்பிக்கை ஒரு போதும் பொய்யானதில்லை என்று கூறிய குருமூர்த்தி ரஜினிகாந்த் முடிவு குறித்து தாம் கூறுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications