அதென்ன மணியா? இந்தி தெரியாது போடானு சொன்னானுங்க.. இப்ப தமிழ்லயே 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே- எச் ராஜா
சென்னை: இந்தி தெரியாது போடானு சொல்லி போராடினானுங்களே, இப்போ தமிழ் பாடத்தில் 47ஆயிரம் பேர் ஃபெயிலாமே என பாஜக நிர்வாகி எச் ராஜா கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இந்தி திணிப்பை மத்திய அரசு மும்மொழி கொள்கை, இந்தியில் தகவல் பலகை உள்ளிட்டவை மூலம் நுழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தென்னிந்தியர்கள் எதிர்த்தனர்.
மேலும் விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னை இந்தியரா என கேட்டதாக கனிமொழி எம்பி பரபரப்பு ட்வீட் போட்டிருந்தார்.

இந்தி திணிப்பு
இதையடுத்து தென்னிந்தியாவில் இந்தி திணிப்புக்கு எதிராக பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டன. இந்தி தெரியாது போடா என டி சர்ட்டை தமிழ் சினிமா நடிகர்கள் அணிந்து இந்தி திணிப்புக்கான எதிர்ப்பை காட்டினர். இதையே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் தங்கள் ட்விட்டரில் டிரென்ட்டாகினர்.

இணைப்பு மொழி
அது போல் தமிழ்தான் இணைப்பு மொழி என்றும் தமிழகத்திலும் ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் தமிழகத்தில் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்தான் இணைப்பு மொழி என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு குறித்து ராகுல் காந்தி பல முறை உச்சரித்தது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் ஒரு தமிழன் பதில் அளித்திருந்தார்.

தமிழகம்
இந்த நிலையில் அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழ் பாடத்தில் மட்டும் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதுதான் திராவிட மாடலா என கேட்டு விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை எச் ராஜாவும் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

எச் ராஜா ட்வீட்
இதுகுறித்து எச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் சத்யராஜ் ஸ்டைலில் அதென்ன மணியா? இந்தி தெரியாது போடான்னு கெத்தா டீஷர்ட்லாம் போட்டுட்டு போராடினானுங்க. தமிழ் பாடத்துல 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே. இப்போ என்ன பண்ணுவானுங்க, தமிழ் தெரியாது போடான்னு ஒப்பாரி வைப்பானுங்களா? என கேள்வி எழுப்பி இதுதான் திராவிட மாடல் என கேப்ஷன் போட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications