இரண்டாம் தாரமா ஹன்சிகா? கண்ணாடியில் விழுந்த கல்.. நாத்தனார் பஞ்சாயத்தால் விவாகரத்து?கணவர் விளக்கம்!
சென்னை: கடந்த சில வாரங்களாகவே மீடியாக்களில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் விவாகரத்து செய்திதான் பேசுபொருளாக மாறி இருக்கிறது சமூக வலைதளங்களிலும் ஹன்சிகா அவரது கணவரை பிரிய போவதாக பேசி வருகின்றனர் இந்த நிலையில் தான் ஹன்சிகா உடன் விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் அவரது கணவர்
தமிழ், தெலுங்கு, கன்னடம் பாலிவுட் என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 1991 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஹன்சிகா, முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான தேசம்முதுகு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முன்னதாக இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அவரது தந்தை பிரபல தொழிலதிபர் என்பதோடு, தாய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதற்கு பிறகு ஒரு கல் கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, வேலாயுதம், எங்கேயும் காதல் என பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகாவின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது திடீரென திருமணம் செய்து கொள்வதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இருந்த போதும் ரசிகர்கள் அவரது திருமண வாழ்வு சிறக்க வாழ்த்தினர். தனது தோழியின் கணவரான சோஹல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் தோழிக்கும் கதூரியாவுக்கும் விவாகரத்தான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து மும்பையில் கணவருடன் செட்டிலானார் ஹன்சிகா.
இந்த நிலையில் தான் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தன்னை கொடுமை செய்வதாக கதுரியாவின் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து கணவன் மனைவியிடையே மோதல் நிலவிய நிலையில் கடந்த சில மாதங்களாகவே கணவரை பிரிந்த ஹன்சிகா தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவியது.
இது தொடர்பாக ஹன்சிகா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மும்பை போலீசார் இந்த புகார் தொடர்பாக ஹன்சிகாவின் கணவர் சோஹல் கதூரியாவிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவர்களுக்குள் விவாகரத்து நடந்ததா எனவும் கேள்வி எழுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் இருவரிடையே விவாகரத்து நடந்ததாக வந்த தகவல் உண்மையில்லை என தெரிவித்திருக்கிறார் சோஹல் கதூரியா. இதன் மூலம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வெளியான ஹன்சிகா சோஹல் கதூரியா விவாகரத்து விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications