ரூ.75 லட்சம் வீட்டுக் கடன் தரும் "கூட்டுறவு" செயலி.. பயிர்க்கடனிலும் அதிரடி.. கூட்டுறவுத்துறை அதிரடி
சென்னை: தமிழக கூட்டுறவு துறையின் கூட்டுறவு செயலி குறித்து தெரியுமா? விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கடன் வழங்கக்கூடிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
தமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

பயிர்க்கடன்: பயிர்க்கடனை பொறுத்வரை, நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.. இதனை செயல்படுத்தும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன..
அந்தவகையில், பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்றும் பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கூட்டுறவு அமைப்பு: இதனிடையே, சட்டசபை கூட்டத்தில், "கூட்டுறவு அமைப்புகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாய பெருங்குடி மக்கள் சிறு வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்னையின உறுப்பினர்கள் மற்றும் நகைக்கடன் பெறும் இணை உறுப்பினர்கள் விரைவாகவும், எளிதாகவும், கடன் பெற்றிட இணைய வழி கடன் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும், இதன் மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் காலவிரயமின்றி உடனடி வங்கிச் சேவை பெறுவது உறுதிச் செய்யப்படும்" என்று கூட்டுறவு துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படியே, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய "கூட்டுறவு" (Kooturavu) என்ற செயலியை கூட்டுறவுத்துறை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் புதிய செயலி குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கி உள்ளார்.
இந்த செயலி எப்படி பயன்படுத்தப்படுகிறது? யார் யார் இதற்கு விண்ணப்பிக்க முடியும்? என்பது குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது.
புதிய செயலி: பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் 'கூட்டுறவு' செயலி மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பமானது தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடைகிறது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த 'கூட்டுறவு' செயலி மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி வீதம் 8.5 சதவீதமாக இருப்பதுடன் இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்
என்னென்ன கடன், எப்படி விண்ணப்பிப்பது: கூட்டுறவு வங்கி மூலம், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோருக்குள் நுழைந்து, 'கூட்டுறவு' (Kooturavu) என்ற ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
- செயலியை திறந்து, "வங்கி சேவை" பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
- அதைத்தொடர்ந்து "கடன் தகவல்" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
- அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.
வீட்டுக்கடன்: இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில், அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். "வீட்டுக்கடன்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்டதுமே, கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (அதாவது மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர், விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications