ரேஷனில் ஹேப்பி நியூஸ்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குஷி.. இலவச ரேஷன் திட்டத்தில் அதிரடி.. இதுதான் மோடி
சென்னை: இலவச ரேஷன் பொருட்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இது நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது..

இதையடுத்து, பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர். ஆனால், இப்படி இணைக்கப்பட்ட பிறகுதான், பல மோசடிகள் சில மாதங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்திருந்தன.
மோசடிகள்: நிறைய பேர், வேறொரு மாநிலத்தின் வசிப்பிட சான்றிதழை தானாகவே உருவாக்கி ரேஷன் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கிவந்திருக்கிறார்களாம்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் இப்படி மொத்தம் 9500 பேர் சிக்கியிருந்தார்கள். இவர்கள் எல்லாருமே பீகார் மாநிலம் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள நுகர்வோர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்கள்.. அத்துடன், ரொம்ப வருடங்களாகவே, ரேஷனை பயன்படுத்தி கொண்டிருந்தவர்களும்கூட...
சான்றிதழ்கள்: இருப்பிட சான்றிதழ்களை தயார் செய்து, அதை வைத்து, ரேஷன் கார்டுகளை வாங்கியிருக்கிறார்கள்.. ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணியை அரசு தொடங்கியபோதுதான், இப்படியான மோசடி தெரிய வந்திருக்கிறது.
அதாவது, நிறையப்பேர் தகுதியில்லாமல் இலவச ரேஷன் திட்டத்தின் பலனைப் பெற்று வருவதாக வருவதால், தகுதியிருக்கும் பல அட்டைதாரர்கள் அதன் பலனை பெறமுடியாமல் போகிறது.. எனவேதான் அனைத்து மாநிலங்களிலும், தகுதியில்லாத குடும்பங்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை உடனடியாக ஒப்படைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.
பயனாளிகள்: தகுதியில்லாதவர்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்காவிட்டால் விசாரணைக்குபிறகு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில், 9500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, கடந்த 2022ம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கோதுமை வழங்கும் பணி மறு சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த மாநிலத்திலும், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய 40,000 குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன..
பஞ்சாப் சலசலப்பு: கார்டுகளை இப்படி ரத்து செய்திருந்தது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது... பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க துவங்கினர்.. இதையடுத்து, தற்போது, கார்டு ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களின் தரவுகளும் மறுபடியும் ஒருமுறை உணவு மற்றும் வழங்கல் துறையின் மூலம் அரசின் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஒரு வருடத்துக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட 40,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த மாதத்திலிருந்தே மீண்டும் ரேஷன் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பஞ்சாப் மாநில மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சபாஷ் அறிவிப்பு: அதுமட்டுமல்ல, கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக இலவச ரேஷன் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் இந்த இலவச ரேஷன் திட்டத்தின் பலனை பெற்று வருகின்றனர்.
எனவே, இந்த இலவச ரேஷன் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. மேலும் தேர்தல் நெருங்கி வருவதால், இப்படியொரு அறிவிப்பு மத்திய அரசுக்கு மிகுந்த பலனை மக்களிடம் பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications