பிரிச்சு வையுங்க.. ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு.. அரிசி அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. இனி நிம்மதி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களின் புகார்களை போக்கவும் உரிய அதிரடிகளை கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரிசி அட்டைதாரர்களின் சுமையை தமிழக அரசு குறைத்து வருகிறது.. ஆனால், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் முற்றிலுமாக இன்னமும் ஒழிக்க முடியாமல் உள்ளது. குறிப்பாக, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

ரேஷன் அரிசி: தமிழக எல்லைகளில் இதற்கெனவே புரோக்கர்கள் இருக்கிறார்களாம்.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு, இந்த ரேஷன் பொருட்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்றவர்களால்தான், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைப்பதில்லை என்று பொதுமக்களின் புகார்கள் அதிகரித்தபடியே வருகின்றன.
இந்த கடத்தலை ஒழிக்க தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஓரளவு ரேஷன் பொருட்களின் கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புகார்கள்: அதேபோல, ரேஷன் வாங்குவதற்கு கடைகளுக்கு சென்றாலே பாதி பொருட்கள் மட்டுமே கிடைப்பதாகவும், மீதி பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும் பணியாளர்கள் சொல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்... இதனால் சில ரேஷன் கடைகள், சண்டைக்டையாக மாறிவிடுகின்றன..
சில வணிக நிறுவனங்களுக்கு அரிசி கோதுமை, சீனி, எண்ணெய் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்களே புகார் சொல்கிறார்கள். வாங்காத பொருளுக்கும் வாங்கியதாக செல்போனில் மெசேஜ் வருகிறதாம். இதையடுத்தான், பொதுமக்கள் தமிழக அரசிடம் நேரடியாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.
குறையும் கடத்தல்கள்: கடத்தலை தடுக்க மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ப்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், ரேஷனில் சில பொருட்கள் தரமற்று இருப்பதாக மீண்டும் ஆங்காங்கே புகார்கள் கிளம்பி உள்ளன. அரிசி, கோதுமையை இந்திய உணவு கழகத்திடமும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடமும், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்குகிறது.
இவைகள், கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகமும் செய்யப்படுகின்றன. சில இடங்களில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன. இதையடுத்து, இந்த புகாரையும் களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.
பிரித்து வையுங்க: அதன்படி, ரேஷன் பொருட்களின் தரத்தை, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு பொருளின் மாதிரியையும், கடைக்கு முன்பு, சிறிய பாத்திரங்களில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்று, ரேஷன் ஊழியர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளதாம்.... இப்படி தனித்தனியாக பொருட்களை பிரித்து வைத்து காட்சிப்படுத்துவதன் மூலம், அரிசி உட்பட அனைத்து பொருட்களின் தரத்தையும், கார்டுதாரர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications