மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. இந்த 8 மாவட்டங்களுக்கும் வீடு தோறும் ஸ்மார்ட் மீட்டர் வசதி! இதுதான் தேதி
சென்னை: தமிழகத்தில் தற்போது டிஜிட்டல் மின் மீட்டர்கள் மூலம் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. இவற்றை ஸ்மார்ட் மீட்டராக மாற்ற ரூ.19,235 கோடியில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான டெண்டர் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஜூலை 31-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார வாரியத்தை பொறுத்தவரை, மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்து வருகிறது.. எனவேதான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தையே கொண்டுவர நினைக்கிறது.

காரணம், மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில், அனைத்து மின் இணைப்புகளிலும், 'ஸ்டேடிக் மீட்டர்' பொருத்தப்பட்டிருந்தாலும், ஊழியர்கள் ரீடிங் எடுப்பதில் பல தவறுகள் நடப்பதாக புகார்கள் முளைத்தபடி உள்ளன.. எனவே, ஆளில்லாத மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும்வண்ணம், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த முடிவானது.
வருகிறது ஸ்மார்ட் மின் மீட்டர்
இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்தாகியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் மீண்டும் டெண்டர் விடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அவற்றை 93 வருடங்களுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இந்த டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இதனிடையே, 160 கோடி ரூபாய் செலவில், ஒரு முனை பிரிவில் 8 லட்சம் மீட்டர்களும், மும்முனை பிரிவில் 3.50 லட்சம் மீட்டர்களும் வாங்க, தலா 6 நிறுவனங்களுக்கு பணி ஆணைகளை மின் வாரியம் சமீபத்தில் வழங்கியிருந்தது..
சாதாரண மீட்டர் எதுக்கு?
ஆனால், , ஏற்கனவே, ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளபோது, எதுக்காக சாதாரண மீட்டர் வாங்க முடிவெடுக்க வேண்டும்? இதனால் இப்போது வாங்கப்பட உள்ள மீட்டர்கள் வீணாகுமே? இதனால் செலவும் அதிகரிக்குமே? என்று சலசலப்புகள் கிளம்பின.
ஆனால், இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், "கிட்டத்ட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய மின் இணைப்பு கேட்டு அப்ளை செய்துள்ளதால், மீட்டர்கள் தேவையாக இருரக்கிறது.. எனவேதான், ஒருமுனை மற்றும் மும்முனை பிரிவுகளில், 11.50 லட்சம் மீட்டர்கள் வாங்க முடிவாகியிருக்கிறது.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டுவர உள்ளதால்தான், சாதாரண மீட்டர் கொள்முதல் குறைக்கப்பட்டது" என்று விளக்கம் தந்திருந்தனர்..
டெண்டர் ஆரம்பமாகிறது
அத்துடன், ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் வேலை துரிதமானது.. குறிப்பாக, சென்னை, வேலூர் மண்டலத்தில் 49.43 லட்சம், கோவை, ஈரோடு மண்டலத்தில் 56.74 லட்சம், கரூர், நெல்லை மண்டலங்களில் 49.98 லட்சம், திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களில் 49.77 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் என 6 கட்டமாக பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அது தொடர்பான பணிகளும் வேகமெடுத்தன.
இந்நிலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ஜூலை 31ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலானது, மிகுந்த மகிழ்ச்சியை மின்நுகர்வோர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
ஸ்மார்ட் மீட்டர் பயன்கள்
இந்த ஸ்மார்ட் மீட்டர் எப்படி வேலை செய்யும் தெரியுமா? மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாப்ட்வேர் வடிவில் அப்லோடு செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணத்தை அனுப்பி வைத்துவிடும்.
இதற்காகவே, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டுகள், மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர்கள் போன்றவை பயன்படுத்தி ஆளில்லா மின்பயன்பாடு கணக்கெடுக்கப்படும்.. வீடு வீடாக ஊழியர்கள் ரீடிங் எடுக்க வேண்டியிருக்காது.. SMS மூலமே, பில் சென்றுவிடுவம்..
மின்சார திருட்டு, கரண்ட் கட், போன்ற புகார்களையும் ஸ்மார்ட் மீட்டர் மூலமே பதியலாம்.. எனவேதான், இந்த ஸ்மார்ட் மீட்டரை பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications