ஒரே அறிக்கை.. 2 லட்டு.. ரெடியாகும் எடப்பாடியார்.. பல ஆயிரம் கோடி மிச்சமாகுமே!
தமிழக அரசு ஊழியர்களின் வயது வரம்பு உயர்கிறது
சென்னை: ஒரே அறிவிப்பில் 2 லட்டு தர போகிறார் எடப்பாடியார் பழனிசாமி.. அரசு பணியாளர்களுக்கான இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மறைந்த தலைவர்கள் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, அள்ளி அள்ளி தந்திருக்கிறார்கள்.. எப்போதெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்து போராடுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்களை சமரசம் செய்து தங்களுடன் அரவணைத்து கொள்வார்கள்.
போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.. அந்த வகையில், இருவருமே பல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்திருக்கிறார்கள்.. அதுபோலவேதான் எடப்பாடி அரசும் ஏகப்பட்ட சலுகைகளை செய்து வருகிறது.

அறிவிப்பு
2 நாளைக்கு முன்புகூட, சில கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றும் அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.. இந்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தந்திருந்தது.. ஆனால், தடாலடியாக 2 அறிவிப்பு வெளியிட்டு, அரசு ஊழியர்களின் மனசை குளிர்வித்தார்.. திமுகவின் வியூகத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

முதல்வர்
இப்போதும் அதுபோலவே ஒரு அறிவிப்பு வெளியாக உள்ளது.. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று முதல்வர் பழனிசாமி அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான கோப்புகள் தற்போது முதல்வர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

60 ஆக உயர்வு
சில மாதங்களுக்கு முன்பும், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது... இந்த வயது வரம்பு, கொரோனா காலத்தில், கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது... இது தற்போது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது... இதுதான் இன்று டாக் ஆப் தி தமிழ்நாடாக உருவாகி வருகிறது. ஏனெனில் இதே கோரிக்கையை தான் பல வருடங்களாக அரசு ஊழியர்கள் எழுப்பி வந்தனர்.. முதலில், ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் கூடுதலாக ஓராண்டு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

ஆலோசனை
இருந்தபோதிலும், ஓய்வு பெறும் வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் சார்பில் எதிர்ப்புகள் அப்போதே தெரிவிக்கப்பட்டன.. பல சங்கங்கள் இந்த அறிவிப்பை அப்போது வரவேற்கவும் செய்தன.. இதற்கு பிறகுதான், மத்திய அரசு ஊழியர்களை போன்றே தங்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். முதல்வரும் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.. அதன்படியே இன்று அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

அதிரடி
இந்த அறிவிப்பு வெளியானால், இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.. ஒன்று, அரசு ஊழியர்கள் கூடுதலாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.. மற்றொருபுறம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும்.. இந்த தொகை ஓய்வு வயது உயர்வால் ஓராண்டுக்கு பின்தான் தேவைப்படும். இதுதான் அதிரடி திட்டமாகும்.. ஏனெனில், இப்போது தமிழக அரசின் நிதி நிலைமை பற்றாக்குறையில் இருப்பதால் ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை வழங்கும் தொகையை 2 ஆண்டுகளுக்கு மிச்சப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதன் விளைவுதான் இப்படி ஒரு அறிவிப்பு ஆகும்..

அடுத்த அதிரடி
ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாய், அரசு அலுவலர்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் முன்பணம் பெறும் வரம்பு உயர்வு, அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மழை நிவாரணத் தொகை அதிகரிப்பு என அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இன்றைய தினம் வெளியாகும் அறிவிப்புகள் மூலம் முதல்வர் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications