Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா போச்சோ.. எடப்பாடி பழனிசாமி டீம் "இதை" நோட் பண்ணலயா.. இதுல இவ்ளோ இருக்கா.. பலே பலே பாஜக

சின்னம் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிளானை பாஜக முறியடித்துவிட்டதாக சொல்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைத்த குஷியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.. இதை தங்களுக்கான வெற்றியாகவும் கொண்டாடி வருகிறது.. ஆனால், பாஜக வேறு ஒன்றை நினைத்து நிம்மதியில் உள்ளதாம்.. என்ன அது?

நடக்க போகும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட எல்லா வியூகங்களும், ஓபிஎஸ்ஸை பலவீனப்படுத்த எடுத்து கொண்ட முயற்சியாகவே பார்க்கப்பட்டது..

ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்வதற்காக மட்டும்தான்.. "கூட்டணி" என்று பெயரை பேனரில் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்கொள்வதற்காகத்தான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்..

 லாஸ்ட் நிமிஷம்

லாஸ்ட் நிமிஷம்

ஒரு கட்டத்தில் பாஜகவை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி கழற்றிவிடவும் செய்தது.. தேர்தல் பணிக்குழு பேனரில் கூட்டணியை மாற்றி, பாஜகவுக்கே டென்ஷனை தந்துவிட்டது.. எனினும், அதிமுகவின் 2 அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தியது.. பின்னர் சுப்ரீம்கோர்ட் தலையீட்டுக்குப் பிறகு, வேட்பாளரை அதிமுக ஓபிஎஸ் அணி வாபஸ் பெற்றது... எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை உறுதியானது.. பாஜகவும் கடைசிநாளில் தன்னுடைய ஆதரவை தந்தது.. வேறு வழியில்லாமல் ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை வாபஸ் பெற்றார்..

சறுக்கல்கள்

சறுக்கல்கள்

எடப்பாடி பழனிசாமிக்கான வெற்றியாக இது பார்க்கப்பட்டு வருவதுடன், ஒன்றிணைக்க முயன்று முடியாமல் போன பாஜகவின் சறுக்கலாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. அத்துடன், களத்தில் நின்று போட்டியிட தயங்குவதும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதனால்தான், எடப்பாடியை அதிமுகவினர் தூக்கி வைத்து கொண்டாடி வரும் சூழலில், பாஜகவோ வேறு கணக்கை போட்டுள்ளது.. உண்மையை சொல்லப்போனால், எடப்பாடியைவிட இந்த விஷயத்தில் ஸ்கோர் செய்தது பாஜகதான் என்கிறார்கள்.. அதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.

 சேவல் கூவுமா

சேவல் கூவுமா

கடந்த 1989-ல் சட்டசபை தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார்.. அதாவது புதிய சின்னத்தில் தன் செல்வாக்கை நிரூபித்தார்... இதற்கு பிறகுதான் கட்சி அவர் வசம் சென்றது.. அதுபோலவேதான், இரட்டை இலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.. புதிய சின்னம் கிடைத்தால், அதில் போட்டியிட்டு, 2வது இடத்தை பிடித்தால்கூட அதிமுக தன் வசமாகிவிடும் என்று கணக்கு போட்டுள்ளார்.. அதனால்தான் பாஜகவிடம் பணிந்தும் போகாமல், ஓபிஎஸ்ஸை கிட்டயும் சேர்த்துக்கொள்ளாமல், தனித்து போட்டியிடுவதில் குறியாக இருந்தார் என்கிறார்கள்.

 மோப்பம் பிடிச்ச பாஜக

மோப்பம் பிடிச்ச பாஜக

இந்த பிளானைதான், பாஜக மோப்பம் பிடித்துவிட்டதாம்.. உடனே இந்த விஷயத்தை மேலிடத்துக்கு கொண்டு சென்றுள்ளது.. ஒருவேளை, தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபித்தால், எம்பி தேர்தலில் எடப்பாடி பலம் கூடிவிடும்.. அவர் கொடுக்கும் சீட்டுக்களை மட்டுமே நம்மால் வாங்க வேண்டிய நிலைமை வரும் என்பதை உணர்ந்துள்ளது.. இதன்காரணமாகவே, இந்த 6 மாத காலங்கள் இல்லாமல், திடுதிப்பென்று, 2 தரப்பையும் சமாதானப்படுத்த போவதாக களமிறங்கியது தமிழக பாஜக.. ஒரே நாளில் 2 தரப்பையும் அடுத்தடுத்து சந்தித்து, ஒற்றுமையையும் வலியுறுத்தியது.. ஆனால், எடப்பாடி டீம் உஷாராகிவிட்டது.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

அதனால்தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், "நாங்கள் பலமாகத்தான்" இருக்கிறோம் என்று உடனடியாக பதிலடி தந்தாராம்.. எடப்பாடியை பாஜக தலைவர்கள் நேற்றைய தினம் சந்தித்துவிட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே, பொன்னையனும் காட்டமான பேட்டி தந்திருந்தார்.. "பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தார்..

 நழுவிடுச்சே

நழுவிடுச்சே

ஆனால், அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, தன்னுடைய வேட்பாளரை ஓபிஎஸ் வாபஸ் பெற்றார். இதனால், தென்னரசுவுக்கு, இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இதைதான் எடப்பாடிக்கு வெற்றி கிடையாது, பாஜகவுக்குதான் வெற்றி என்கிறார்கள்.. காரணம், ஜெயலலிதாபோல செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை, பாஜக முறியடித்துவிட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.. இரட்டை இலை சின்னம் என்பதால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், அது அதிமுகவின் வெற்றியாக மட்டுமே பார்க்கப்படுமே தவிர, எடப்பாடியின் வெற்றியாக பார்க்கப்படாது.. தன்னுடைய வெற்றி என்றும் எடப்பாடி பழனிசாமியால் முழுமையாக சொல்லி கொள்ளவும் முடியாது..

 கடுங்கோபம்

கடுங்கோபம்

அதுமட்டுமல்ல, வேட்பாளரை வாபஸ் பெற்றதால்தான், அதிமுகவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன என்று ஓபிஎஸ்ஸும் இனிமேல் உரிமை கோருவார்.. தேர்தலில் 2வது இடத்தை எடப்பாடி பெற்றாலும்கூட, இதில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றே சொல்ல வாய்ப்புள்ளது.. அப்படியானால், இந்த பஞ்சாயத்து அடுத்தக்கட்டத்துக்கும் நகரக்கூடும்.. மறுபடியும் 2 தரப்புக்குள் அதிகார மோதல் வெடிக்கும்.. மறுபடியும் பாஜக மேலிடத்தை இது கோபப்படுத்தக்கூடும்.. என்றாலும், இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட யுக்தியை பாஜக முறியடித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+