"பிளேட்டை" திருப்பிட்டாரே.. மீசை வெச்ச ஆம்பளை.. எடப்பாடியிடம் பாய்ந்த கணை.. இவரா? திமுகவே எதிர்பாக்கல
சென்னை: "நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா.. மொதல்ல நீ அதை செய் பார்ப்போம்" என்று ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில் ஓபிஎஸ் பேசியதற்காக, எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தது.. இதனால் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும், மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் மூண்டது..
2 பேருமே ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர்.. மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

கைகலப்பு
எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் 2 பேருமே அருகருகே அமர்ந்திருந்த நிலையில் முதன்முறையாக நேற்று நேரடியாகவே பேரவையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது பலராலும் உற்றுநோக்கப்பட்டது.. எடப்பாடி தரப்பினரை மூத்த தலைவர் முனுசாமியும், மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ்ஸூம் சமாதானம் செய்தனர்.. இந்த தலைவர்கள் சமாதானம் செய்யாவிட்டால், பேரவையில் அன்றைய தினம் கை கலப்பு நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள். முனுசாமி மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியனுக்கும் வைத்தியலிங்கத்துக்கும் அடி விழுந்திருக்குமாம்.. அந்தளவுக்கு ஆக்ரோஷமாக வார்த்தைகளை வீசியிருந்தனர்.

மனோஜ் பாண்டியன்
இந்த ரகளையையொட்டி எடப்பாடி தரப்பு தனியாகவும், ஓபிஎஸ் தரப்பு தனியாகவும் தங்களுடைய அணியினருடன் ஆலோசித்திருக்கிறார்கள்.. இதில், ஓபிஎஸ் தரப்பில் நடந்த ஆலோசனையில், தங்களை அடிக்கப்பாய்ந்த அவர்கள் மீது (எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் மீது ) சபாநாயகரிடம் புகார் கொடுக்கலாம். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என புகார் கொடுக்கலாம்" என்று மனோஜ் பாண்டியன் சொன்னாராம்.. ஆனால், அதனை ஓபிஎஸ் ஏற்கவில்லையாம்.. "புகார் என்று கொடுக்க போனால், முதலில் அவர்கள் தான் நம் மீது கொடுக்க முடியும். ஏன்னா... நீங்க (மனோஜ்) வேட்டியை மடித்துக் கட்டி ரகளை செய்தது தான் பெரியளவில் இருக்கிறது. நான் தடுக்காவிட்டால் நீங்கள் அவர்கள் மீது கையை வைத்திருப்பீர்கள்" என்று கூறி மனோஜ் சொன்ன ஐடியாவை தடுத்து நிறுத்திவிட்டாராம்.

கடிவாளம்
அதேபோல எடப்பாடியும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, "நம்மிடயே மோதல் வெடிக்கணும்தான் திமுக விரும்புகிறது. இல்லைன்னா, ஓபிஎஸ்சை பேச எதற்கு அனுமதிக்க வேண்டும்? கட்சிக்கு ஒருத்தரைத்தான் பேச அனுமதிக்க முடியும் என்பது சபாநாயகருக்கு தெரிந்தும் அவரை பேச அனுமதிக்கிறார்கள்னா அது முன் கூட்டியே திட்டமிடப்பட்டது... ஸ்டாலினின் நோக்கமும் அதுதான்.. எதிர்க்கட்சி தலைவரான நான் உட்பட சிலரை 10 நாளைக்கு சஸ்பெண்ட் செய்து விட்டு, சபையில் ஓபிஎஸ்சை அதிமுக சார்பில் பேச வைப்பார்கள். அதுதான் திட்டம்.. 2 தரப்பையும் மோதவிட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது.. அதனால், நம் எம்எல்ஏக்கள் யாருமே, உணர்ச்சிவயப்படாத அளவுக்கு பார்த்துக்கணும்" என்று கடிவாளம் போட்டாராம்.

மீசை வெச்ச ஆம்பளை
இப்படி இரு தரப்பினருமே ஒருவருக்கொருவர் கோபத்திலும் ஆதங்கத்திலும் உள்ளதால், இந்த விரிசல் மேலும் அதிகமாகி உள்ளதாகவே கூறப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருதுஅழகுராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.. "அண்ணன் ஓபிஎஸ்ஸை பேச அழைத்தார் என்று சட்டப் பேரவை தலைவரிடம் மல்லுக்கு நிற்கும் எடப்பாடி, நாடாளுமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினர் என்று பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிடுவதை எதிர்த்து தன் அல்லக்கைகள் சகிதமாக எடப்பாடி பாராளுமன்றத்தை நோக்கி படைதிரட்டி போவாரா... நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வேட்டி கட்டுன ஆம்பிளையா இருந்தா மொதல்ல நீ அதை செய் பார்ப்போம். என்ன நாஞ் சொல்றது? என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

உல்டா
நடந்து முடிந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, "நீ சரியான ஆம்பளையா இருந்தால்.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தால்.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தால்.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி.. உங்களுக்கு திராணி கிடையாது. தெம்பு கிடையாது.. அதிமுகவை நேரடியாக சந்திக்கும் திறமை கிடையாது. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி என்று பொதுமக்கள் முன்னிலையில், முதல்வரை பிரச்சாரத்தில் கேட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியா இப்படியெல்லாம் பேசியது? என்ற அதிர்ச்சி கேள்விகள் வெடித்த நிலையில், இன்று அதே கேள்வி, ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்து கிளம்பி, எடப்பாடி தரப்பை நோக்கி பாய்ந்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

நொட்டை நொட்டை
அதுமட்டுமல்ல, நேற்று முன்தினம் மருது அழகுராஜ், குழம்பிப்போய் ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.. "எப்புடி இப்புடி எடப்பாடி.. எடப்பாடி விரும்பும் தீர்ப்புகள் ஏறத்தாழ அவர் விரும்பும் நேரத்தில் அவர் விரும்பும் வடிவத்தில் வருகிறது... ஆனால் எடப்பாடியை அச்சுறுத்தும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு முதல் ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட அத்தனை வழக்குகளும் கோமா நிலையிலேயே அசைவற்று. கிடக்கிறதே எப்புடி இப்படி.. #ஒரேகுஷ்டமப்பா.. நீதி மன்றங்களில் எடப்பாடி.. எது கேட்டாலும் கிடைக்குதே எப்படி.. அதுவும் விசாரிக்கும் போது அது நொட்டை இது நொட்டைன்னு எடப்பாடி தரப்பை திட்டிப்புட்டு கடைசியில தீர்ப்பை மட்டும் அந்த எடப்பாடி உத்தமனுக்கு சாதகமாவே எழுதுறாங்களே எப்படி... கோர்ட்டுக்கு போறதும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குபோறதும் ஒரே மாதிரி இருக்குல்ல.. என்ன நாஞ் சொல்றது?" என்று கேட்டிருந்த நிலையில், இன்றைய தினம் எடப்பாடியை நோக்கி சவால் விடுத்துள்ளது, உற்றுநோக்க வைத்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications