தமிழ்நாட்டிலே டாப்.. உருவாகுதா புது அணி.. பாஜக அம்பை எடுக்க.. அதை வாங்கி ஓபிஎஸ் வீச.. அதிருது அதிமுக
சென்னை: போற போக்கை பார்த்தால், பாஜக பலமான கூட்டணியை அமைத்து, தனித்து போட்டியிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போதைய கள நிலவரமும் அப்படித்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.
சிறுபான்மையினர் வாக்குகளை குறி வைத்து, பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டது அதிமுக.. இது பாஜகவுக்கு அதிர்ச்சிதான் என்றாலும், இதுவரை அதிமுகவை சமாதானப்படுத்தவில்லை.. எடப்பாடி பழனிசாமியிடமும் இதை பற்றி பேசியதாக தெரியவில்லை.

பாஜக : ஒருவேளை 5 மாநில தேர்தல் பிஸியில், மேலிட தலைவர்கள் ஈடுபட்டிருப்பதால், டிசம்பர் மாதத்தில், தமிழகத்தின் மீது கவனம் திரும்பக்கூடும் என தெரிகிறது. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்சிகளிடம் துவங்கிவிட்ட நிலையில், அதிமுகவும், கூட்டணி விஷயத்தில் மும்முரமாகி உள்ளது.
தமிழக பாஜகவும் தனித்து களமிறங்குவதாகவே தெரிகிறது.. நேற்றைய தினம், தேர்தல் பணிகளை கவனிக்க, 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை, அக்கட்சி நியமித்திருக்கிறது.. இது தவிர, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொறுப்பாளர்கள்: தென்காசி -பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோடு - வானதி சீனிவாசன், நாமக்கல் - துணை தலைவர் வி.பி.துரைசாமி, அரக்கோணம் - துணை தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அப்படியானால் 39 தொகுதிகளிலும் பாஜக தனித்து களமிறங்குவதாகவே கருதப்படுகிறது.
ஏற்கனவே, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவுக்கான ஆதரவை பாஜக தந்து வருகிறது.. இதுபோக, பாரிவேந்தர், தேமுதிக, ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, வாசன், ஏசி சண்முகம் போன்றோரிடமும் நல்லிணக்கத்தை பேணி வருகிறது. இவர்கள் அனைவரையும் இணைத்து கூட்டணி வைக்கவும், தமிழக பாஜக தயங்காது என்கிறார்கள்.
டிடிவி தினகரன்: இதில், தினகரனை பொறுத்தவரை, படுதெம்பாக இருக்கிறாராம்.. எப்படியும் 4 சீட்டுக்களை தருவதாகவும், தேர்தல் செலவுகள் உட்பட இன்னபிற விஷயங்களையும் ஏற்பதாகவும் மேலிடம் உத்தரவாதம் தந்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. அதேபோல இந்த முறை தேர்தலில், சசிகலாவின் ஈடுபாடும் சற்று அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.. இதற்கு கைமாறாக, தன் சார்பாக 2 சீட்கள் வேண்டும் என்று மேலிடத்தை கேட்டு வருகிறாராம்.
இதில், ஓபிஎஸ் நிலைமைதான் குழப்பமாகவே இருப்பதாக தெரிகிறது. நீதிமன்ற உத்தரவுகள் ஒவ்வொன்றிலும், பின்னடைவை சந்தித்து வரும்நிலையில், தற்போது, அதிமுகவுக்கு "செக்" வைக்க முயன்றுவருகிறாராம்.
ஓபிஎஸ்: அதாவது, சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்பதில், இறுதியான நீதிமன்ற தீர்ப்பு இன்னும் வரவில்லை. அப்படியிருக்கும்போது, அதிமுக மட்டும் கொடி, சின்னத்தை எப்படி பயன்படுத்தலாம்? அவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு, தேர்தல் ஆணையத்தில் மனு செய்ய போகிறாராம்.
ஓபிஎஸ் கையிலெடுக்கும் இந்த வியூகத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்பினரே எதிர்பார்க்கவில்லையாம். இதற்கு பின்னிணியில், 'மேலிடம்' இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒருவேளை, ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படுமானால், இது எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கலை தந்துவிடக்கூடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தேர்தல் ஆணையம் இதற்கு எப்போது பதிலளிக்கும்? யாருக்கு சாதகமாக அளிக்கும் என்பதும் தெரியவில்லை.
அறிகுறிகள்: ஆக, எப்படி பார்த்தாலும், பாஜகவின் அதிரடிகள் இப்போதே ஆரம்பமாகி விட்டதால், தமிழக அரசியலில் 3வது அணிக்கான அறிகுறிகள் நிறையவே தென்பட துவங்கிவிட்டதாம்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications