சென்னையில் இடம் வாங்கி போட்டிருக்கீங்களா.. 'பவர் பத்திரம்' இப்படியும் நடக்குது மோசடி.. உஷார் மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொரட்டூரில் ராஜாராம் என்பவர் வாங்கி போட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் நிலத்தை பவர் பத்திரம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து 2 வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார் ஒரு பெண். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடி எப்படி நடந்துள்ளது என்பதை பாருங்கள்.

சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 20-வது குறுக்குத் தெருவை சேர்ந்த 60 வயதாகும் ராஜாராமுக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர்.

Have you bought a place in Chennai? Power Bond is also a scam, Be careful people

ஊறுகாய், முறுக்கு, பிஸ்கட் தயாரித்து கடைகளுக்கு வினியோகம் செய்து விற்பனை செய்து வருகிறார். தனது உழைப்பால் சென்னை கொரட்டூர், மூகாம்பிகை நகரில் சுமார் 4800 சதுர அடி நிலத்தை வாங்கி போட்டிருந்தார்.

இந்தநிலையில் கொரட்டூர், மூகாம்பிகை நகரில் இருந்த நிலங்கள் 2 வீட்டு மனைகளாக மாறி இருந்திருக்கிறது. ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதை கண்டு ராஜாராம் அதிர்ச்சி அடைந்தார். விஜி என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் பவர் பெற்று அதன் மூலம் மோசடி செய்ததை கண்டுபிடித்தார்.

இதுபற்றி புகார் அளிக்கஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு போன ராஜாராம் அங்கிருந்த மத்திய குற்றப்பிரிவு போலீசில் பத்திர மோசடி குறித்து புகார் கொடுத்தார். இதையடுத்து புகாரை ஏற்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில், உதவி கமிஷனர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அரியலூர் மாவட்டம், சின்ன வளையம், குடியாத்தம் தெருவை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி விஜி (44) தான் மோசடி செய்தது தெரியவந்தது. எப்படிப்பட்ட மோசடி என்றால், ராஜாராமின் தங்கை விஜி என போலியான ஆவணம் தயாரித்து, அதன்மூலம் ராஜாராம் தனது தங்கை விஜிக்கு பவர் கொடுத்ததாகவும் மாற்றி இருக்கிறார்.

அதன் பின்னர் விஜி அதை வைத்து சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த கொத்தசுப்புராயுடு, ஆந்திர மாநிலம் மதில்மேடு பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பழனி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அஜய் ஆர்சாட் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் ராஜாராமுக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளையும் 3 ஆக பிரித்து விஜி விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று காலை விஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். போலி பவர் பத்திரத்தை தயாரித்து உங்களுக்கே தெரியாமல் யாராவது உங்கள் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

எனவே சென்னையில் இடம் வாங்கி போட்டிருந்தால், அந்த நிலத்திற்கு முறையாக பட்டா பெற்று வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் அவ்வப்போது உங்கள் நிலத்தையும் கண்காணித்து கொண்டே இருங்கள். இல்லாவிட்டால் இப்படியாக சிலர் மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இப்படியாராவது போலியான பவர் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றால் உடனே காவல்துறையில் புகார் அளித்து நிவாரணம் பெற முடியும்.எனவே அச்சப்படவும் வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+