முகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்
Recommended Video

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கண்டுபிடித்து தர கோரிய ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
காணாமல் போன சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது, முகிலன் எங்கிருக்கிறார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்திருந்தது. விசாரணையை தொடரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முகிலனை மீட்க கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முகிலனை கடந்த ஜூலை 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கரூரை சேர்ந்த பெண் அளித்திருந்த பாலியல் புகாரில் ஜூலை 7-ம் தேதி தேதி கைது செய்திருப்பதாகவும், தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications