திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்தின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்து ஹைகோர்ட் சொன்ன யோசனை
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டபேரவைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுதேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கு.க.செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.

அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஆர்.செல்வம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், கு.க.செல்வம் தலைவராக உள்ள ஸ்ரீஜெயா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக மதுரவாயலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஏக்கர் நிலம் உள்ளதாகவும்,இந்த விவரத்தை கு.க.செல்வம் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கு.க.செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்த சொத்து அறக்கட்டளையின் பெயரில் வாங்கபட்டுள்ளது எனவும் அந்த அறக்கட்டளை பொது மக்களுக்கான அறக்கட்டளை எனவும், அந்த அறக்கட்டளையின் பெயரிலேயே வருமானவரி செலுத்தப்படுவதாகவும் அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணக்குமார், தேர்தல் வழக்கில் எம்.எல்.ஏ. கு.க.செல்வத்துக்கு எதிராக கூறியிருந்த குற்றசாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அவர்கள் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் சொத்து விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications