எடப்பாடியை நம்ப முடியாது.. பண்ருட்டி அப்படி பேசியதும்..உடனே காதுக்குள் வந்து ஓபிஎஸ் சொன்ன விஷயம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார் என ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அடிப்படை பண்பான நம்பகத்தன்மை எடப்பாடியிடம் இல்லை என்றும் பண்ருட்டியார் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக கூட்டணியில் இருந்தும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி, பாஜக உடன் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும். 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னையில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்தின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடு கழக தொண்டர்களோடு தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எப்படி, எங்கு, எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்து விவாதித்தோம். அதேநேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது எனவும் முடிவு செய்துள்ளோம் என்றார். (அப்போது ஓபிஎஸ் கூறிக்கிட்டு ஏற்கனவே மேல்முறையீடுசெய்து நம்பர் ஆகிடுச்சு என்றார்).
அதன்பின்னர் மேல்முறையீடு செய்து நம்பர் ஆகிவிட்டது என்றார் பண்ருட்டி. ஆகவே சட்டப்போராட்டம் ஒருபுறமும், புரட்சி பயணம் மறுபுறமும் தொடரும் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.இன்று ஏற்பட்டுள்ள சூழலை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல அகில இந்தியாவிற்குமே வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்..

ஆகவே அரசியலில் நம்பகத்தன்மை இருக்க வேண்டியது அடிப்படையானது. கடைக்கு போய் ஒரு பொருளை வாங்க பையனை அனுப்புவது என்றாலும் கூட நம்பத்தகுந்தவரை தான் அனுப்புவோம். அதேபோல் தமிழ்நாட்டை ஆளும் உரிமையை ஒரு நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு தான் தர வேண்டும். அந்த நம்பிக்கையை, நம்பகத்தன்மையை பெறுவது ஒரு அரசியல்வாதியின் அடிப்படை பண்பாகும்.
அந்த நம்பிக்கைக்கு உரியவர் எனது அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்கள். இது நிரூபிக்கப்பட்டது.. அதேபோல் நம்பக்கதன்மை அற்றவர் யார் என்பதை நாடும் அறியும் உலகமும் அறியும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள், நீங்கள் பாஜக கூடடணியில் இருக்கிறீங்களா இல்லையா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும் என்றார். அப்போது பண்ருட்டியிடம் செய்தியாளர்கள் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு தேர்தல் வரும் போது சொல்வோம். எங்களை பொறுத்தவரை ஏற்கனவே என்ன முடிவெடுத்தோமோ, அதே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.. பாரதிய ஜனதா கட்சியில் என்ன செய்ய போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.. பாஜக எடுக்கும் முடிவினை பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications