சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இந்த வார இறுதியில் சொந்த ஊர் போறீங்களா? தமிழக அரசு நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து வார இறுதி நாட்களில 925 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் சுபமுகூர்த்த நாட்களும் வருகிறது. இதன் காரணமாக பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.. அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Heading home from Chennai Kilambakkam this weekend Good news from Tamil Nadu Govt

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஏப்.6, 7 (சனி, ஞாயிறு) வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்.5, 6 தேதிகளில்... அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்.5, 6 தேதிகளில் 615 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 925 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்றஇணையதளம் மற்றும் tnstc செயலிமூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சென்னை, பெங்களூரு திரும்ப பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+