தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா ஏன்.. கோயம்பேடுதான் முக்கியக் காரணம்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கோயம்பேடு சந்தைதான் என சுகாதாரத் துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,023 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 203 பேர் சென்னைவாசிகள் ஆவர்.
இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு கொடுத்துள்ளது. அதனால் இன்றைய தினம் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டது. ஃபோகஸ்ட் டெஸ்டிங்கால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

சென்னை
வழக்கமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகும். ஆனால் இன்று மாலை 5.30 மணிக்கே வெளியானது. அதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துவிட்டது. இன்று 377 பேர் ஆண்களும், 150 பேர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
சென்னையில் மேலும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1724ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12,773 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு இத்தனை உயர்வு ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

150 பேர்
அதன்படி கோயம்பேடு சந்தை மூலம் இன்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பெரிய நோய் பரப்பும் மையமாக மாறியதில் எந்த சந்தேகமும் இல்லை. இது வரை கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

பூ விற்கும் சந்தை
கோயம்பேடு சந்தையில் இருந்த 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுவிட்டன. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கோயம்பேடு சந்தை மூடலால் பலர் சொந்த மாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர். எனவே கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்த 7500 பேரை கண்டறிய மாவட்ட நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications