யார் பாருங்க.. போயும் போயும் எருமை மாட்டுக்கு முன்னாடி.. அதுவும் தண்ணி தொட்டிக்குள்ளே.. ஆமா, அதென்ன?
நடுரோட்டில் ஊர்ந்து சென்ற பாம்பை தூக்கி காட்டுக்குள் வீசியுள்ளார் ஒரு நபர்
சென்னை: இணையத்தில் 2 வீடியோக்கள் ஷேர் ஆகி கொண்டிருக்கின்றன.. இரண்டுமே மாறுபட்ட வீடியோக்கள் என்றாலும் நெட்டிசன்கள் அதை ரசித்து வருகிறார்கள்.
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

ராஜநாகம்
இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. இப்படித்தான், 2 நாளைக்கு முன்புகூட ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்.. அந்த ராஜநாகங்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டு, அவர்முன்பு வளைந்து மண்டியிட்டு பாத்ரூமிலேயே விழுந்து கிடந்தன.

பாம்பு வால்
இந்த வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது. இன்னொரு பாம்பு வீடியோவும் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் இதை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவில் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையில் நடக்கிறார்.. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த சாலையின் நடுவில் ஒரு பாம்பு உள்ளது.. சாலையின் இரு பக்கமும் அடர்ந்து காட்டுப்பகுதி தெரிகிறது.. இந்த பாம்பின் அருகில், அந்த நபர் வேகவேகமாக செல்கிறார்.. உடனே அவருடன் வந்திருந்த மற்ற நண்பர்கள் வாகனத்தில் இருந்தபடியே, "கிட்டபோக வேண்டாம்" என சத்தம் போடுகிறார்கள்..

மூக்கணாங்கயிறு
ஆனாலும் அந்த நபர் எதையும் பொருட்படுத்தாமல், அந்த பாம்பின் அருகில் சென்று, டக்கென அதன் வாலை பிடித்து, பக்கத்தில் இருக்கும் காட்டை போடுகிறார்.. அந்த பாம்பும் காட்டுப்பக்கமாக ஊர்ந்து செல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, வெலவெலத்து போகிறது. அதேபோல, மற்றொரு ஜாலி வீடியோ ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அந்த வீட்டில் மாடுகள் வளர்க்கிறார்கள் போலும்.. 2 மாடு வீடியோவில் தென்படுகிறது.. இதில் ஒரு எருமைப்பாட்டிற்கு தீனி போட வந்துள்ளார் அந்த பெண்.. தீனி வைத்துவிட்டு, அதன் மூக்கணாங்கயிறையும் பிடித்து இழுத்து கட்டிவிடுகிறார்..

தண்ணி தொட்டி
பிறகு, திடீரென அந்த எருமை மாடு முன்பு டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறார்.. அதுவும் பாம்பு டான்ஸ்.. அந்த டான்ஸ், எருமை மாட்டுக்கே பொறுக்கவில்லை போலும்.. கடுப்பாகி, அந்த பெண்ணை முட்டிவிட்டது.. மாடு முட்டியதில், அந்த பெண் தூக்கி வீசப்பட்டு, அருகில் கிடக்கும் தண்ணீர் தொட்டிக்குள் தொப்பென்று விழுந்துவிடுகிறார்.. இந்த வீடியோவைதான் நெட்டிசன்கள் ஷேர் செய்து, அந்த பெண்ணின் டான்ஸை கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications