கயிறு சரியா இருக்கா பொண்டாட்டி? ஃபேனில் மனைவி தூக்கில் தொங்க.. சிரித்தபடி வீடியோ எடுத்த ஆந்திர கணவர்
சென்னை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் மனசாட்சியை உலுக்கும் வகையில் அரங்கேறியுள்ள இந்த துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காப்பாற்ற வேண்டிய கணவனே, மனைவியை இப்படி செய்வாரா? என்ற அதிர்ச்சி மக்களிடம் கிளம்பி உள்ளது.. இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்து, பொதுமக்களையும் நிலைகுலைய வைத்துள்ளது..!!
கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், ரவிசங்கரின் அதீத சந்தேகம் கசப்பை உண்டாக்கியது. லாவண்யாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ரவிசங்கர், அவரை தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கொடூரத்தின் உச்சம் - வீடியோ எடுத்த கணவன்
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரவிசங்கரின் தொடர் ஏளன பேச்சுகளாலும், சந்தேக கணைகளாலும் மனமுடைந்த லாவண்யா, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லி, ஃபேனில் தூக்குப் போட முயன்றுள்ளார். பொதுவாக, உணர்ச்சி வசப்பட்டு மனைவி இப்படி சொன்னால், எந்த கணவரும் பதறிப்போய்விடுவார்கள்.. ஆனால், யாருமே செய்யாத ஒரு காரியத்தை ரவிசங்கர் செய்துள்ளார்.
தனது மனைவியை காப்பாற்றுவதற்கு பதிலாக, ரவிசங்கர் தன்னுடைய செல்போனை எடுத்தார்.. லாவண்யா ஃபேனில் தூக்கு போடுவதை வீடியோ எடுக்க தொடங்கினார்.
அதுமட்டுமல்ல, வீடியோ எடுத்துக் கொண்டே, "எப்படி தூக்கில் தொங்கணும் தெரியுமா? கயிறு சரியாக இருக்கிறதா?" என்றெல்லாம் கேட்டு கொடூரமான அட்வைஸ்களை தந்துள்ளார்.. இதன் உச்சக்கட்டமாக மனைவியின் மரணத்தை ஒரு நேரடி ஒளிபரப்பு போல வீடியோவில் பதிவு செய்துவிட்டார்..
காவல்துறை நடவடிக்கை
கணவன் வீடியோ எடுத்து கொண்டிருக்கும்போதே லாவண்யாவின் உயிர் மெல்ல மெல்ல பிரிந்தது.. அவர் உயிரிழந்த பிறகுதான், இந்த வீடியோ ஆதாரங்கள் வெளியே கசிந்தன. இதைப் பார்த்த லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இறுதியில், இது தற்கொலை அல்ல, கணவனின் தூண்டுதலால் நடந்த கொலை என லாவண்யாவின் அப்பா புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில், ராஜம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவிசங்கரை கைது செய்துள்ளனர். உயிரிழந்த லாவண்யாவின் உடலை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. ரவிசங்கரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூகப் பாதிப்பு
இந்த சம்பவம் தார்மீக ரீதியாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு மனித உயிர் தன் கண் முன்னே ஊசலாடும் போது, அதைக் காப்பாற்றத் துணியாமல் வீடியோ எடுக்கும் மனநிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது. இப்போது இந்த வீடியோ ஆதாரங்கள் ரவிசங்கருக்கு எதிரான முக்கிய சாட்சியாக மாறியுள்ளன. இந்த வீடியோவானது, கல்நெஞ்சக்காரர்களையும் பதற வைத்து வருகிறது...!!
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், லாவண்யா தற்கொலைக்கு முயன்றபோது, அவரது இரண்டு குழந்தைகளும் அந்த இடத்திலேயே இருந்துள்ளனர்.. குழந்தைகள் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல் ரவிசங்கர் அந்த வீடியோவை தொடர்ந்து எடுத்துள்ளார்.. தனது தாயின் மரணத்தை அந்தப் பிஞ்சு குழந்தைகள் நேரில் பார்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications