சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இட்லி குண்டானில் இருப்பது போல இருக்கு.. அப்படி அவியுது.. சென்னையில் இன்று வெப்பம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது. இனி அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில்
அனல் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி கத்தரி வெயில் தொடங்கி வரும் மே 28-ஆம் தேதி முடிவடைகிறது. இத்தனை நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்தே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் இன்று 105 டிகிரியாக பதிவாகியுள்ளது. காலை முதலே வெப்பம் தகித்து வருகிறது.

    எல்லாம் குப்பை பஸ்கள்.. எதுக்கு இப்படி ஒரு அரசியல்.. பிரியங்கா மீது பாய்ந்த.. ரேபரேலி காங். எம்எல்ஏஎல்லாம் குப்பை பஸ்கள்.. எதுக்கு இப்படி ஒரு அரசியல்.. பிரியங்கா மீது பாய்ந்த.. ரேபரேலி காங். எம்எல்ஏ

    வானிலை மையம்

    வானிலை மையம்

    இன்று சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 86 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். இந்த நிலையில் இனி அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு தற்போது சாலைகளில் ஆங்காங்கே கரும்பு ஜூஸ் கடைகள், தர்ப்பூசணி பழக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இது சாலை மார்க்கமாக பணி செய்வோருக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது.

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    சென்னையில் அதிகபட்சமாக நேற்றைய தினம் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்தது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறியவர்களும் வயதானவர்களும் கர்ப்பிணிகளும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெருப்பு

    நெருப்பு

    சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர் தெரிகிறது. இந்த வெப்பத்தால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் மழை பெய்த நிலையில் தற்போது அனல்காற்று வீசுவது நேரடியாக நெருப்பில் நிற்பது போல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    ஆறுதல்

    ஆறுதல்

    ஆம்பன் புயல் கிளப்பி விட்ட வெப்பத்தால்தான் இந்த வெப்பக்காற்று வீசுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த முறை கத்தரி வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த ஆண்டு வெப்பம் 100 டிகிரியை தாண்டாதது ஆறுதல் அளிப்பதாக பரவாயில்லை என்கிறார்கள் இன்னும் சிலர்.

    English summary
    Heat wave sizzles in Chennai with high temperature of 105 F. All heat waves because of heat waves.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X