கீழடி அகழாய்வு முடிவுகள்... அடேங்கப்பா மலைக்க வைக்கும் விவாதங்கள்!
Recommended Video
சென்னை: கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டதுதான் தாமதம்.. இந்த ஆய்வுகளை முன்வைத்து இடைவிடாத விவாதங்கள் ஊடகங்கள், சமூகவலைதளங்களில் அனல்பறக்கின்றன.
சென்னை அருகே அதிரம்பாக்கத்தில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்கள் சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பதை அகழாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. இதேபோல் வரலாறு குறிப்பிடும் இடைக்கற்காலம் தொடங்கி அத்தனை கால மனிதர்களும் இந்த தமிழர் பெருநிலப்பரப்பில் வாழ்ந்தனர் என்பதற்கான ஏராளமான அகழாய்வு சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

இந்த அகழாய்வுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவதுதான் கீழடி முடிவுகள். கிமு 6-ம் நூற்றாண்டில் வைகை நதிக்கரையில் எழுத்தறிவும் வாழ்வியல் வளமும் கொண்ட மிகச் செழுமை வாய்ந்த உச்சகட்ட நகர நாகரிகம் செழித்தோங்கியிருந்ததை 4 ஏக்கர் பரப்பளவிலான அகழாய்வுகளில் கிடைத்த ஆயிரக்கணக்கான பொருட்கள் நிரூபித்திருக்கின்றன.
இப் பொருட்கள் அனைத்துமே உரிய அறிவியல் முறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தமிழக தொல்லியல் துறையால் "கீழடி- வைகை நதிக் கரையில் நகர நாகரிகம்" என்கிற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த கீழடி அகழாய்வு முடிவுகளை முன்வைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வாதங்கள், எதிர்வாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு:
- கீழடியில் இதுவரையில் வழிபாடு சார்ந்த எந்த ஒரு பொருளும் கிடைக்கவில்லை என்பதால் ஆதி தமிழர்கள் மதமற்றவர்களாக இருந்தனர்
- கீழடியில் இதுவரை குறுகிய பரப்பளவில்தான் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் கீழடி தமிழர்கள் மதமற்றவர்கள் என்கிற முடிவுக்கு உடனே வருவது சரியல்ல.
- கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் ஆதன், குவிரன் என்ற பெயர்கள் தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்தால் எழுதப்பட்டுள்ளன.
- தமிழ் பிராமி என்று ஏன் உச்சரிக்க வேண்டும்? தமிழி என்றே எழுதுவதாலும் உச்சரிப்பதாலும் என்ன இடர்பார்டு வந்துவ்விடப்போகிறது?
- குவிரன் என்பது வடமொழிச் சொல்லாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
- வணிகப் பொருட்களை குவித்து வைத்து வியாபாரம் செய்த நபரை குவிரன் என தமிழர்கள் குறித்திருக்கக் கூடும். ஆகையால் குவிரன் என்பது தமிழ்ப் பெயர்தான்.
- கீழடியை திராவிடர் நாகரிகம் என சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அது தமிழர் நாகரிகம் என சொல்ல தயங்குவது ஏன்?
- வரலாற்றின் பக்கங்களில் சிந்துவெளியை திராவிடர் நாகரிகம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் தொடர்ச்சி என்பதால் கீழடியை திராவிடர் நாகரிகம் என குறிப்பிடுவது தவறு இல்லை
- தமிழ்தான் திரிந்து த்ரமிள், த்ரவிட, திராவிட என மருவியது. ஆகையால் திராவிடம் என்பது தமிழரையே குறிக்கும்.
- ஆந்திரர்களை மட்டும் குறிக்கும் சொல்தான் திரிவடுகர் எனும் திராவிடர். அதனால் தமிழருக்கும் திராவிடருக்கும் தொடர்பு இல்லை.
- வட இந்திய கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழர்களை திராவிடர்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர்.
- ஆதன் என்பது தமிழ்ப்பெயர்தான்.. ஆனால் நெடுஞ்சேரலாதன் போன்ற ஆதன் பெயர்கள் பொதுவாக சேர மன்னர்களைத்தானே குறிக்கின்றன. பாண்டியர் நாடாகிய மதுரையிலும் ஆதன் என்கிற பெயர் பொது தமிழ்ப்பெயராக இருந்ததா?
இப்படியாக தொடர்கின்றன விவாதங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications