சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக பெண்களின் அமோக ஆதரவை அள்ள போவது யாரு.. சுவாரஸ்ய கருத்து கணிப்பு.. பின்னுக்கு போன அதிமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பெண்களின் ஆதரவை அள்ள போவது யாரு?

    சென்னை: இப்பஜெயலலிதா வேறு இல்லை. எனவே தமிழகத்தில் பெண்கள் வாக்குகள் யாருக்கு போகும் இந்த முறை. இதை வைத்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோம். வந்த முடிவோ படு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

    இன்று முதல் கட்ட தேர்தல் ஆரம்பித்தாகி விட்டது. நமக்கு 18-ம் தேதிதான் தேர்தல். இந்த நிலையில், "தமிழக பெண்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும்?" என்று தெரிந்து கொள்ள ஒன் இந்தியா தமிழ் மூலமாக ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இதற்கு "அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, யாருக்கும் கிடைக்காது" போன்றவை ஆப்ஷன்களாக தரப்பட்டன.

    கருணாநிதி தாத்தாவின் சொந்த ஊரில் பேரன் அருள்நிதி தீவிர பிரச்சாரம் கருணாநிதி தாத்தாவின் சொந்த ஊரில் பேரன் அருள்நிதி தீவிர பிரச்சாரம்

    திமுக

    திமுக

    அதில் அதிமுகவுக்கு 21.45 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். 48.49 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 10.3 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 10.96 சதவீதமும் கிடைத்துள்ளது. அதாவது திமுகவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி

    நாம் தமிழர் கட்சி

    இதில் அதிமுக, திமுக கட்சிகளுக்கான வாக்கு சதவீதம் என்பது எதிர்பார்க்கக்கூடியதும், கணிக்கக் கூடியதும்தான். ஆனால் யாருமே எதிர்பாராதது நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும். முந்தைய தேர்தல்களை விட இப்போது நாம் தமிழர் கட்சி வீறு கொண்டு எழுந்து வருகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களும் ஆழமான கருத்துக்களை முன்வைத்து வாக்கு கேட்பதால் அக்கட்சிக்கு இத்தகைய வளர்ச்சி கிடைத்திருக்கும் என தெரிகிறது.

    ஜூனியர் கட்சி

    ஜூனியர் கட்சி

    ஆனால் நாம் தமிழர் கட்சியைவிட ஜூனியர் கட்சியான மய்யத்திற்கும் அதற்கு நிகரான வாக்குகளை பெண்கள் செலுத்தியுள்ளது மேலும் வியப்பை கூட்டுகிறது. இதற்கு காரணம் கமல் என்ற ஒற்றை மனிதன் எடுத்து வைக்கும் புதுமையான அணுகுமுறைதான்! ரிஸ்க் எடுத்து வரும் கமலுக்கு பெண்களின் இந்த சப்போர்ட் சற்று பலத்தையே தரும்!

    யாருக்கும் கிடைக்காது

    யாருக்கும் கிடைக்காது

    இதில் மிகவும் பரிதாபத்துக்குரியது பாஜகதான். வெறும் 2.15 சதவீதம் பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதைவிட கொடுமை, "யாருக்கும் கிடைக்காது" என்ற ஆப்ஷனுக்கு 6.91 சதவீதம் ஓட்டுக்கள் வந்து விழுந்திருக்கின்றன. அதாவதுஇந்த சாதாரண கருத்துக் கணிப்பிலும் கூட நோட்டாவை பாஜக வெல்லவில்லை என்பது சுவாரஸ்யமானது.

    கணிப்புதான்

    கணிப்புதான்

    இதெல்லாம் ஒரு கணிப்புதான்! குத்துமதிப்பாகத்தான் இந்த வாக்கு சதவீதத்தை எடுத்து கொள்ள முடியுமே தவிர மக்களின் மனங்களில் என்ன உள்ளது என்பதை தேர்தல் ரிசல்ட்டின்போதுதான் உறுதியாக தெரியவரும்.. எனவே அதுவரை விரலை ரெடியாக வைத்துக் கொண்டு காத்திருப்போம்.

    English summary
    "Women's support to which party?" One India Tamil Websites survey conducted. There is a tough competition between MNM and Naam Tamizhar Party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X