திடீரென வரும் மிக கனமழை.. சென்னைக்கு வானிலை மையம் வார்னிங்.. 10 மாவட்டங்களில் பிச்சு எடுக்கும்!
சென்னை: சென்னையில் இன்று மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கடந்த வாரம் முழுக்க சென்னையில் மிக கனமழை பெய்து வந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது.
இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தது. அதோடு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது.

சென்னை
இப்போது அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் இதனால் சென்னைக்கு மழை வராது. மாறாக காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக சென்னையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை
சென்னை மட்டுமின்றி மேலும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் இன்று பெய்யும். சில மாவட்டங்களில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

அரபிக்கடல்
தற்போது அரபிக்கடல் முதல் வங்க கடல் வரை காற்று திசை வேகம் மாறுதல் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து தென்மேற்கு வங்க கடல் வரை இந்த காற்று திசை மாறுதல் ஏற்பட்டுள்ளது. கடலில் இருந்து 4.5 கி.மீ. உயரம் வரை இந்த திசை மாறுதல் ஏற்பட்டுள்ளதால் கேரளா, வடதமிழ்நாடு, தென் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடல்
இதனால் தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் இரண்டிலும் பலத்த காற்று வீசும். 60 கிமீ வரை காற்றை வேகமாக வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரு சில டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications