"க்ளோபல் பாய்லிங்" தொடங்கிவிட்டது? இனி இப்படித்தான் மழை, வெள்ளம் ஏற்படும்! எச்சரிக்கும் ரிப்போர்ட்
சென்னை: உலகம் முழுக்க க்ளோபல் பாய்லிங் தொடங்கிவிட்டது என்று ஐநா எச்சரித்து உள்ளது. இனி உலகம் முழுக்க காலநிலை மாற்றம் ஏற்படும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதலின் சகாப்தம் முடிந்துவிட்டது. உலகளாவிய கொதிநிலை சகாப்தம் தொடங்கிவிட்டது.. அதாவது க்ளோபல் பாய்லிங் தொடங்கிவிட்டது. கடந்த 1,20,000 ஆண்டுகளில் ஜூலை 2023 மிக வெப்பமான மாதமாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.

உலக வானிலை மையத்தின் கூற்றுப்படி, ஜூலையின் வெப்பநிலை இவ்வளவு அதிகம் ஆவது கண்டிப்பாக ஒருமுறையோடு முடியாது. இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல முறை இதேபோல் கூடுதல் வெப்பநிலை பதிவாகலாம். அல்லது குறைந்தபட்சம் ஒரு முறையாவது இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் பதிவாகலாம். வெப்பநிலை நாளுக்கு நாள் இனி உயரும்.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வது, கடலில் அதிக நீர் கலப்பது, அதீத மழை பெய்வது, காலநிலை மாறுவது, ஐஸ் கட்டிகள் கரைவது ஆகியவை நடக்கலாம் என்று ஐநா எச்சரித்து உள்ளது. அவர்களின் கூற்றுப்படி புவி வெப்பமயமாதலின் சகாப்தம் முடிந்துவிட்டது. உலகளாவிய கொதிநிலை சகாப்தம் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர்,
உலக வானிலை: க்ளோபல் பாய்லிங் தொடங்கிவிட்டது, இனி இப்படித்தான் மழை, வெள்ளம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக வெப்பநிலை: அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திலாவது, உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டும். தொழில் புரட்சிக்கு பின்பாக ஏற்படும் மிக அதிக வெப்பநிலை மாற்றமாக இது இருக்கும் என்று உலக வானிலை மையம் எச்சரித்து உள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உச்ச வெப்பநிலையை இது அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் காலநிலை மாற்றம், எல் நினோ வானிலை மாற்றம் மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் ஏற்பட்டது போன்ற ஆபத்தான கலவை காரணமாக க்ளோபல் பாய்லிங் ஏற்பட்டு உள்ளது. காலநிலை மாற்றம் மிக வேகமாக , அப்பத்தான் அளவிற்கு ஏற்படுவதுதான் க்ளோபல் பாய்லிங் என்று ஐநா தெரிவித்துள்ளது. இதனால் வரும் காலங்களில் வானிலையை கணிப்பதே கடினம் என்று ஐநா தெரிவித்துள்ளது.
சென்னை வெள்ளம்: சென்னையில் சமீபத்தில்தான் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக கனமழை பெய்து சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.
அதேபோல் தென் மாவட்டங்களும் மிக கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கே பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. ஒரு வருடம் பெய்ய வேண்டிய 90 செமீ மழை எல்லாம் ஒரே நாளில் தென் மாவட்டங்களில் பெய்துள்ளது. இந்த மழைக்கு பின் காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில்தான் உலகம் முழுக்க க்ளோபல் பாய்லிங் தொடங்கிவிட்டது என்று ஐநா எச்சரித்து உள்ளது. இனி உலகம் முழுக்க காலநிலை மாற்றம் ஏற்படும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. முக்கியமாக இனி வானிலையை கணிக்க முடியாது என்றும் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications