10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் குட்டிச்சுவராய் போன சென்னை மாநகரம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சென்னை மாநகரத்தை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் திடீரென நேற்று பல மணிநேரம் பெருமழை பெய்து வெளுத்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னையில் இயல்பு வாழ்க்கையை மிக கடுமையாக பாதித்தது. பல பகுதிகளில் 20 செ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெய்த மழை சென்னையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

வாகனப் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நேற்று மாலை பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான சாலைகளில் பல அடி உயரத்துக்கு மழைவெள்ள நீர் தேங்கி இருந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம், 3 மணிநேரம் பயணித்தே பலரும் வீடு திரும்பினர்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேராக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு சென்று ஆய்வுகளை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மழை வெள்ளப் பாதிப்புகளை நேற்றும் இன்றும் ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். மழைவெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டனர்.

எதிர்பாராத பெருமழை
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வானிலை ஆய்வு மையம் கூட எதிர்பார்க்காத நிலையில் பெருமழை பெய்திருக்கிறது. மழைவெள்ள நீரை மோட்டார்கள் மூலமாக வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் தேங்கி உள்ள மழை நீர் முழுமையாக விரைவில் அகற்றப்பட்டுவிடும்.

குட்டிச் சுவராக சென்னை
சென்னை மாநகரத்தை கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு குட்டிச்சுவராக்கி வைத்துவிட்டது. இப்போதைய நிலையில் விமர்சனம் செய்ய தயாராக இல்லை. சென்னை மாநகரத்தின் இந்த நிலைமையை அடுத்த பருவமழைக்குள் முழுமையாக சீர் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications