தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை.. சென்னையிலும் செம.. எங்கெல்லாம் பெய்கிறது?
தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கன மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லேசான காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
அதேபோல் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

எங்கு மழை
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
சென்னையில் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், மெரினா, நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. மேலும் அரும்பாக்கம்,கோயம்பேடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த கனமழை
அதேபோல் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம், குமரி, கொடைக்கானல், கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சை, நீலகிரி, திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கடல் எப்படி
கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். கடல் கொஞ்சம் சீற்றமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications