ஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Recommended Video

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 சென்டிமீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டிமீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும். மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரில்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையின் சில பகுதிகள் லேசான மழை மற்றும் தூறல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என்பதால் மழையை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டும். ஒருவேளை புயல் நம்மை நோக்கி நகர்ந்தால் பலன் கிட்டும்.
வியாக்கிழமை முதல் திங்கள் வரை கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications