அண்ணாமலை, பொன்னார், வானதி மறியல்.. 3 மணி நேரம் நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதால் 3 மணி நேரமாக நுங்கம்பாக்கத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது அந்த கூட்டத்தில் இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட போதிலும் அவர் எதிர்ப்பை தெரிவிக்காததால் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை சேகர்பாபு இழந்து விட்டார். இன்னும் ஒரு வார காலத்தில், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும்.
இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி சேகர்பாபு தனது பதவியிலிருந்து விலகாததால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் வள்ளுவர் கோட்டம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுமார் 3 மணி நேரமாக ஆயிரக்கணக்கான பாஜகவினர் மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை இவர்கள் ஊர்வலமாக சென்றதே 2 கி.மீ. நீளத்தில் இருந்தனர். தற்போது அண்ணாமலை உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மாலை 6 மணிக்கு அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணாமலையை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கைது நடவடிக்கை எடுத்தால் மேலும் போராட்டம் வலுப்பெறும் என்பதால் அவர்களாக கலைந்து செல்ல போலீஸார் முயற்சித்து வருகிறார்கள். இன்னும் முக்கால் மணி நேரத்திற்குள் அவர்களாகவே கலைந்து சென்றுவிடுவார்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications