2 கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. சென்னை திரும்பியபோது கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை: விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த மக்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. சென்னை உள்பட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு (ஏப்ரல் 21) ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு பின், தங்கள் சொந்த ஊர்களிலிருந்து ஏராளமான மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் அதிகாலை வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், ஆயிரக்கணக்கான கார்கள், சிறப்பு பேருந்துகள், அரசு பேருந்துகள் மூலம் சென்னை திரும்பி வந்த நிலையில், அதிகமான வாகனங்கள் காரணமாக நேற்று இரவு முதல் சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் பகுதியில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எஸ்.பி கோவில் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டனர். இதேபோல, ரயில் நிலையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்பட்டது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications