திணறுது சென்னை.. ஜிஎஸ்டி சாலையில் கடுமையான டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து வரும் வாகனங்கள்!
சென்னை: சென்னை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் வெளியூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு அதிக அளவிலான மக்கள் செல்வதால், வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து வருகின்றன.
சென்னையில் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், பண்டிகை சமயங்களின் போதும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வார இறுதி நாட்களில் சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் காரணமாக முக்கிய சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

சென்னை நகருக்கு வெளியே புறநகரில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே, சென்னையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பது தான். எனினும், இப்போதும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
இன்று சென்னை தாம்பரம் பகுதியில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சில கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன.
தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
ரயில் சேவை ரத்து காரணமாக, பெரும்பாலானோர் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இதன் காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications