தாராள உதவி செய்யுங்கள்.. எங்களிடமும் சொல்லுங்கள்.. இணைந்து இயலாமையை வெல்லுவோம்
சென்னை: கொரோனாவைரஸ் லாக்டவுனால் உலகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எல்லா நாடுகளுமே கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்திலும் லாக்டவுன் தொடர்வதால் பலர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கூலித் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்து கூலி வேலை பார்ப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமைக் கூலித் தொழிலாளர்கள், தினசரி வருவாய் ஈட்டக் கூடிய வகையிலான வேலை செய்து வந்தோர் என கோடிக்கணக்கானோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தினசரி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் அல்லல்படுவோர் அதிகம். தமிழக அரசும், மத்திய அரசும் அவர்களுக்காக பல உதவிகளை, நிவாரணங்களை அறிவித்துள்ளன. அம்மா உணவகங்களில் இலவச சாப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. இதனால் அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புகளும், தொண்டுள்ளம் படைத்த பலரும் பல்வேறு வகையில் உணவு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவிக் கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்டவர்கள் எங்களிடம் அதைத் தெரிவிக்கலாம். நீங்கள் செய்யும் உதவி எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது மிகப் பெரியது. காரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சிறு உதவிகளும் கூட இன்று அவர்களது உயிர் காக்கும் உதவியாக மாறியிருக்கிறது. எனவே நீங்கள் செய்யும் எந்த வகையான உதவியாக இருந்தாலும் புகைப்படத்துடன் எங்களுக்குத் தெரிவியுங்கள். வீடியோ இருந்தால் அதையும் அனுப்புங்க. இதைப் பார்த்து மேலும் பத்து பேர் உதவிக்கு வந்தால் அது நல்லதுதானே.
ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொள்வோம்.. உதவிக் கரம் நீட்டுவோம்.. உயிர் காப்போம்.. ஒருவரை ஒருவர் அரவணைப்போம். நம்மை நாமே பாதுகாப்போம்
உங்களது உதவி மற்றும் விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications