ஹெல்ப்லைன் எண்களாக 044-25354151, 044-24354995 தொலைபேசி நம்பர் வெளியிட்ட தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் மேலும் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்நிலையில் தான் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் சார்பில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் மைசூர் ரயில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், செ்னனை சென்ட்ரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும்.

இந்நிலையில் தான் இந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்றது. அதன்மீது திடீரென்று பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது.
இதில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தன. 2 ஏசி பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. பயணிகள் தங்களின் உடைமைகளை தூக்கிய கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
முதற்கட்ட தகவலின்படி இந்த விபத்தில் உயிர் பலி இல்லை. இருப்பினும் 7 பேர் வரை காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் தெற்கு ரயில்வேயில் சென்னை மண்டலம் சார்பில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை ரயில்வே மண்டலம் சார்பில் 044-25354151, 044 - 25330952, 044- 25330953, 044-24354995 ஆகிய எண்களை பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் விபத்து, மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், பயணிகளின் விபரம் பற்றி அறிய பொதுமக்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் சமஸ்திர்பூர் - 8102918840, தர்பாங்கா - 8210335395, தானாபூர் - 9031069105, டிடியூ சந்திப்பு - 7525039558, குதூர் - 08624 250795, அங்கோலா - 08592 280306, விஜயவாடா - 0866 2571244, நெல்லூர் 0861 2345863 ஆகிய எண்கள் ஹெல்ப்லைன் எண்களாக மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications