தர்மேந்திராவுடன் நான் வாழவில்லை.. முதல்முறையாக ரகசியத்தை உடைத்த ஹேமமாலினி.. காரணம் என்ன?
சென்னை: பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுடன் தான் வாழாததற்கு என்ன காரணம் என்பதை பாலிவுட் நடிகை ஹேமமாலினி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் தர்மேந்திராவும் ஹேமமாலினியும் பாலிவுட் படங்களில் ஒன்றாக நடித்தபோது காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் 1980 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்ட போது தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர். 1954 ஆம் ஆண்டு பர்காஷ் கவுர் என்பவரை தர்மேந்திரா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தன்னுடன் நடித்த ஹேமமாலினி மீது காதல் வயப்பட்ட அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே ஹேமமாலினியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஹேமாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது ஏற்கெனவே கல்யாணம் ஆனவருடன் தனது மகள் கல்யாணம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. எனினும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகவே ஹேமா திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு பர்காஷ் கவுர் பெரிதாக எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. அது போல் தர்மேந்திராவுக்கும் முதல் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு பிரிய மனமில்லை.
இதனால் முதல் மனைவி, அவர்களது குழந்தைகள் சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா, அஜிதா ஆகியோருடனும் ஹேமமாலினியுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு இஷாவும் 1985 ஆம் ஆண்டு அஹானாவும் ஹேமமாலினிக்கு பிறந்தனர்.
இந்த நிலையில் பாஜகவில் இணைந்து எம்பியாக உள்ள ஹேமமாலினி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இது நடக்க வேண்டும் என யாரும் விரும்பவில்லை. ஆனாலும் நடந்தது. தானாக எது நடந்ததோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி ஒரு வாழ்க்கையை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் கணவர், குழந்தைகள் என சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். ஆனால் சில நேரங்களில் அது சரியாக இருப்பதில்லை. என்னுடைய வாழ்க்கை குறித்து நான் தவறாக கருதியதில்லை. எனது குழந்தைகளுடன் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன். அவர்களை நன்கு வளர்த்தேன்.
குழந்தைகள் வளர்ப்பில் தர்மேந்திரா எந்த நேரத்திலும் உடன் இருந்திருக்கிறார். குழந்தைகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என அவர்தான் கவலைப்பட்டு கொண்டிருந்தார். நான் அது நடக்கும் என கூறுவேன். நேரம் நன்றாக இருந்தால் நல்ல வரன் அமையும் என்பேன். கடவுளின் கிருபையால் எல்லாம் நடக்கும் என்பேன் என்றார்.
தர்மேந்திராவை ஹேமமாலினி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இதுவரை விவாகரத்து பெறவில்லை, அது போல் தர்மேந்திராவின் முதல் மனைவி தனது மகள்களுடன் வசித்து வருகிறார். தர்மேந்திராவுடன் ஹேமமாலினி வாழவில்லை என தகவல்கள் வந்த போதிலும் அதுகுறித்து எந்த கருத்தையும் சொல்லாமல் மவுனமாக இருந்த ஹேமமாலினி தற்போது உண்மையை உடைத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications