ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு முதல் சிவசங்கர் பாபா கைது வரை! அதிரடி காட்டிய விஜயகுமார் ஐபிஎஸ்
சென்னை: சென்னையில் ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி கொலை முதல் அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வரை முக்கிய வழக்குகளில் அதிரடி திருப்பங்களை வெளியே கொண்டு வந்தவர் டிஐஜி விஜயகுமார் என அவருக்கு பலர் புகழாரம் சூட்டுகிறார்கள்.
கோவை டிஐஜியாக இருந்த விஜயகுமார் நேற்றைய தினம் முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த நிலையில் அவர் கண்டுபிடித்த சில முக்கிய வழக்குகள் குறித்து பார்ப்போம்.
சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியர் உமா மகேஸ்வரி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவில் எஸ்பியாக பணியாற்றிய விஜயகுமார் தலைமையிலான போலீஸார்தான் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் எந்த தடயமும் கிடைக்காத நிலையில் ஏடிஎம் மையத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கை விசாரித்து குற்றவாளிகளையும் கைது செய்தார். இந்த சம்பவத்தை வைத்துதான் தெறி என்ற படம் எடுக்கப்பட்டதாகவும் அதில் விஜயின் கதாபாத்திரத்திற்கு இவருடைய பெயரான ஐபிஎஸ் விஜயகுமார் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் சென்னை சிறுச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் கேளம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு உமா மகேஸ்வரி சிறுச்சேரி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் உமாவை வடமாநில தொழிலாளிகள் 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணிடம் இருந்த செல்போன், கிரெடிட் கார்டை திருடி சென்றது தெரியவந்தது.
அது போல் 2022 ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கிருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் போது விஜயகுமார் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக இருந்தார்.
இந்த வழக்கிலும் சிசிடிவி காட்சிகளை வைத்தே வெறும் 40 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் ஒருவரையும் விஜயகுமார் கைது செய்தார். அது போல் சிபிசிஐடியில் பணியாற்றிய போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளையும் விசாரித்தார்.
அந்த வழக்குகளிலும் குற்றவாளிகளை திறமையாக கண்டுபிடித்து கைது செய்தார். அது போல் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகியாக இருந்த சிவசங்கர் பாபா சாமியார் எனும் போர்வையில் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின. தான் கிருஷ்ணர் என்றும் தன்னுடன் உறவுக் கொள்ளுமாறும் அழைத்தார் என 2021 இல் புகார்கள் எழுந்தன.
மேலும் இதற்கு சில ஆசிரியைகளும் உடந்தை என கூறப்பட்டது. அந்த பகுதியில் சிவசங்கர் பாபாவுக்கு நிறைய பக்தர்கள் இருந்த போதும் வழக்கை விசாரித்து சிவசங்கர் பாபாவை டெல்லிக்கே சென்று கைது செய்தார் விஜயகுமார். அது போல் சாத்தான்குளம் வழக்கையும் இவர் திறம்பட விசாரித்தார் என்கிறார்கள். இப்படிப்பட்ட திறமையானவர்களை இந்த தமிழகம் இழந்துவிட்டது என பலர் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications