Shihan Hussaini: இறப்பதற்கு முன்! ஹுசைனியின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது? நிராசையான கடைசி ஆசை
சென்னை: இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும் 16 ஊசிகளும் 26 மருந்துகளும் கொடுக்கப்பட்டதாகவும் தனது கடைசி நிமிடம் எப்படி இருந்தது என்பது குறித்தும் ஷிஹான் ஹுசைனி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று காலை 6 மணிக்கு ஷிஹான் ஹுசைனி வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று 22ஆவது நாள். மருத்துவர்கள் வழக்கத்திற்கு மாறாக என்னை இரு வேளை வந்து செக் செய்துவிட்டு சென்றார்கள்.

ஐசிசியூவில் நான் மூன்றாவது நாளாக இருக்கிறேன். எனது ரத்தத்தின் அளவுகள் எல்லாம் குறைந்துவிட்டன. எனக்கு 27 ஊசிகளும் 26 மருந்துகளும் கொடுக்கப்பட்டன. மனித உடல் என்பது வியப்புக்குரியது. தந்தி டிவியில் பவன் கல்யாணின் நேர்காணலை பார்த்தேன்.
எனது மாணவர்களுடன் ஆன்லைனில் கலந்துரையாடினேன். இரவு உணவிற்காக சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன். எனது மாணவர்களான காம்னா மற்றும் மஹிமா ஆகியோர் மூலம் சில முக்கிய வேலைகளை முடித்தேன். இரவு பணியில் இருந்த மருத்துவரும் அவ்வப்போது என்னை பார்த்துவிட்டு சென்றார்.

இரவு தூக்க மாத்திரையே இல்லாமல் தூங்க சென்றேன். ஐசிசியூவில் நான் சிகிச்சைக்காக இருப்பது நாளைதான் கடைசி நாள் என தெரிவித்திருந்தார். இத்தனை சிகிச்சை மேற்கொண்டும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹுசைனி நள்ளிரவு 1.45 மணிக்கு உயிரிழந்தார்.
அவருடைய இறப்பால் அதிர்ச்சி அடைந்த திரைத்துறையினரும் கராத்தே பள்ளி, வில்வித்தை பள்ளி மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஹுசைனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய பெசன்ட் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் ஹுசைனியின் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஹுசைனி விரும்பினார். ஆனால் அவருடைய உடல் உறுப்புகள் எல்லாம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை தானமாக கொடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனால் இந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என அவருடைய மாணவிகளான காம்னாவும் மஹிமாவும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர். மற்றொரு பதிவில் தான் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கராத்தேவும் ஆயிரக்கணக்கானோருக்கு வில்வித்தையும் சொல்லிக் கொடுத்த இடத்தை விற்பதாக தெரிவித்துள்ளார். அந்த இடம் 1998ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அஷ்டலட்சுமி கோயிலுக்கும் முருகன் அறுபடை வீடுக்கும் இடையே அந்த வீடு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது அதன் உரிமையாளரான ஹுசைனிக்கு (தனக்கு) உடல் நிலை சரியில்லை என்பதால் ரூ 9 கோடி மதிப்பிலான இடத்தை ரூ 11 கோடிக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். அவருக்கு யாரும் வாரிசுகள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். விருப்பப்பட்டோர் யாராவது கேட்டால் அவர்களுக்கு வீட்டின் ஆவண நகல்களும் பட்டாவும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications